வீடுகளுக்கு மாதம் ரூ.200-க்கு இணைய சேவை
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஏப்.25 - தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ.200-க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ள தாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளி யன்று தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில ளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், “தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் என்பது இன்றைய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேலை வாய்ப்புகளையும் உரு வாக்கி வருகிறது. இந்தியாவில் தகவல் தொழில் நுட்பவியல் துறை நடப்பாண்டில் வலுவான வளர்ச்சி பெறவுள்ளது”என்றார். ஒட்டுமொத்தமாக செலவினம் 160 பில்லி யன் டாலர்களை எட்டும் என்றும் தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதியில் 220 பில்லியன் டாலர் களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொ ருள் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வியல் துறையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சென்னை, கோவை, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகள வில் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் 100 கல்லூரிகளில் 35 கல்லூரிகளின் அமை விடமாகவும் அதிகளவில் முனைவர் பட்டதாரி களை உருவாக்கி வருவதன் மூலம் தமிழ்நாடு ஒரு வலுவான உள்கட்டமைப்பு மற்றும் ஆழ மான திறன்மிகு மனிதவளத்தை வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக் கூடிய சேவைகள், வாட்ஸ்அப் செயலி மூலம் ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும்” என்றார்.