tamilnadu

img

பள்ளிகளில் கோடை கால வகுப்புகளுக்கு தடை! - மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கோடை கால வகுப்புகளுக்கு தடை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கோடை விடுமுறை நாட்களில், பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்பு, மாலை நேர வகுப்பு உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். நிபந்தனையை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.