சிறு கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படாதவாறு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயிக்க கோரிக்கை
நாமக்கல், ஏப்.29- சிறு கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படாதவாறு, முட்டைகளின் பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல்லில் உள்ள ஆயிரத்திற் கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளி லிருந்து, தினந்தோறும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைகளின் பண்ணைக் கொள் முதல் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம், தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. பண்ணையாளர் கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு கட்டுபடியாகும் விலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய் யப்படுவது வழக்கம். இந்நிலையில், நாமக்கல்லில், சிறு கோழிப் பண் ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் கோல்டன் பேலஸ் ஹோட்டலில் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, முட்டை விலை நிர்ணயம் செய்து அறி விப்பதில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும். முட்டை விற்பனையில் மைனஸ் விலைக் கூடாது என அறிவித்துவிட்டு, அவர் களே மைனஸ் விலையை வைத்து விற்பதாக தகவல் வெளியாகியுள் ளது. இதனால் சிறு கோழிப்பண்ணை யாளர்கள் முட்டைகளை மிகக் குறைந்த விலையில் விற்கவேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத னால் தொழிலை நடத்த முடியாமல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, முட்டைகளை நிர் ணயம் செய்வதில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு, வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். சிறு கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாதவாறு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என முடிவு எடுக்கப்பட் டது. முன்னதாக, இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.