tamilnadu

img

சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழப்பு

சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், ஏப்.29- சிறுமுகை வனப்பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு  யானை கடந்த ஒரு வார காலமாக வனத்துறையின் மருத்துவக் குழுவி னர் தொடர்ந்து சிகிச்சையளித்து  வந்த நிலையில் செவ்வாயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சிறுமுகை வனச்சரகத் திற்குட்பட்ட கூத்தாமண்டி பிரிவு பகுதியில்  கடந்து ஏழு நாட்களுக்கு முன்பு ஆண் காட்டு  யானையொன்று உடல்நிலை பாதிக்கப் பட்டு நடக்க இயலாமல் சோர்வுடன் நிற்பதை  கண்ட வனத்துறையினர் அதற்கு மருத்துவக் குழு மூலம் சிகிச்சையளிக்க துவங்கினர்.  யானையின் உடலில் காயங்கள் ஏதும் இல் லாத நிலையில் அதன் கல்லீரல் அல்லது சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளில் தொற்று போன்ற ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முடிவெடுத்த வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவி னர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் ஓரளவு யானை தெம்பானாலும் அதன் அடி வயிற்றில் ஏற்பட்டுள்ள வீக்கம்  காரணமாக நடக்க இயலாமல் அங்கேயே நின்றிருந்தது. நீண்ட தூரம் நடக்க இயலா ததால் வனத்துறையினர் கொடுக்கும் உணவு  மற்றும் மருந்துகளை மறுக்காமல் உட் கொண்டு விட்டு அங்கேயே நின்ற யானைக்கு  அதன் உடற்சூட்டை குறைக்கும் வகையில் அதன் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து குளிக்க  வைத்தனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சிகிச்சை பலனின்றி யானை உயிரி ழந்தது. இறந்த யானையின் உடலை வனத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவி னர் சோதனை செய்த பின்னர் உடற்கூறு ஆய்வு நடத்தும் பணி துவங்கியது. இறந்தது ஆண் யானை என்பதால் அதன் தந்தங்கள் அகற்றப்பட்டு உடல் வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.