சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
புதுதில்லி, பிப். 10 - சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக, மக்களவை யில் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது, 8 எம்பிக்.களை இடைநீக்கம் செய்தது; எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீது அவதூறு சுமத்தியது என சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து, ஒருதலைப்பட்ச மாக செயல்படுவதை எதிர்த்து, அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி, திங்கட்கிழமையன்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தி வந்தன. இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் சுரேஷ் மற்றும் முகமது ஜாவேத் ஆகியோர் செவ்வா யன்று (பிப். 10) நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை, மக்களவை பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்த னர். இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள் ளனர். ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும், மக்களின் பொதுவான பிரச்சனைகளை அவையில் எழுப்ப அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டி, அரசியலமைப்பின் 94(c) பிரிவின் கீழ் இந்த நோட்டீஸை எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன. வழக்கமாக, இவ்வாறு நோட்டீஸ் அளிக்கப்பட்ட 14 நாள்களுக்குப் பிறகு, நம்பிக்கை யில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம். தீர்மானம் நிறைவேற அவையில் உள்ள எம்.பி.க்களில் 50 சதவிகி தத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு தேவை. அவ்வாறு பாதிக்கும் மேலான எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு, சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்படுவார். இதனிடையே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பிப். 4 அன்று, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் மக்கள வையில் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, இதுதான் பிரதமர் மோடியைத் தாக்குவதற்கு நடைபெற்ற முயற்சி என்று கதை ஜோடித்துள்ளார்.
