அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரம் மசோதாக் களை கிடப்பில் போட்டுள்ள அவரது செயல் பாடு குறித்து மட்டுமே விசாரிக்கிறோம். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 14 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது ஏன்? மற்ற 12 மசோதாக்களை 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆய்வு செய்கிறாரா? மசோதாக்கள் மறு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டால் கிடப்பில் போட்டு மவுனம் காப்பது ஏன்? குடியரசுத் தலைவர் அதில் என்ன நட வடிக்கை எடுக்க வேண்டும்? ஆளுநரின் உண்மையான செயல்பாடு என்ன என்பது சட்டப்பேரவைக்கு எப்படி தெரியவரும்? அரசு செய்யும் விஷயங்கள் பிடிக்க வில்லை என்றால் அது ஆளுநரின் சொந்த கருத்துதானே? மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்க அரசியலமைப்பு சட்டத்தில் வழி வகை உள்ளதா? மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார்? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, “துணை வேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை ஒன்றிய அரசின் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?’’ என்று பதில் கேள்வி எழுப்பி னார்.
“கடந்த 2023-ஆம் ஆண்டு மசோதாக் களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகு, தற்போது வரை ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? 2 ஆண்டு களாக ஆளுநர் - தமிழக அரசுக்கு இடையே கருத்து பரிமாற்றம் இருந்ததா?” என்று நீதி பதிகள் கேட்டனர்.
இல்லை’ என்று பதிலளித்த அட்டர்னி ஜெனரல், “மசோதாக்கள் அனுப்பி வைக்கப் பட்ட 2 மாதங்களிலேயே ஆளுநர் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில், 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தார்” என்றார்.
அப்படியென்றால் குடியரசுத் தலை வரும் மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “குடியரசுத் தலைவ ரும் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தால் மசோதாக்கள் நிலை அடுத்து என்ன வாகும்? முடிவெடுக்காவிட்டால் மசோதா அப்படியே இருக்குமா?” என்ற கேள்வியை எழுப்பினர்.
“ஒப்புதல் இல்லாமல் குடியரசுத் தலைவரிடம் உள்ளது என்றால் அதற்கு மேல் யாரிடமும் கேட்க வேண்டியது இல்லை’’ என்று அட்டர்னி ஜெனரல் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், “மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர, ஆளுநருக்கு வேறு வாய்ப்பை அரசி யலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. மசோ தாவில் இருக்கும் சட்ட முரண்பாடுகள் பற்றி குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் தெரியப் படுத்தி இருக்க வேண்டும், மசோதா விவ காரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.