நிலவேம்புக் குடிநீர் வழங்கல்
தஞ்சாவூர், நவ.4- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி கிளை சார்பில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திங்கட்கிழமை பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீரை வழங்கி, தானும் அருந்தினார். கடந்த 3 தினங்களாக பேராவூரணி நகரில் கடைவீதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னார்வலர்கள், நிலவேம்பு மூலிகை குடிநீரை வழங்கியதோடு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகளையும் உடனடியாக அகற்றி வருகின்றனர்.
