tamilnadu

img

போராட்டங்கள் வார்த்தெடுத்த புதிய தலைவர்கள்

போராட்டங்கள் வார்த்தெடுத்த புதிய தலைவர்கள்

குமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில மாநாட்டில் சொந்த பாதிப்புகளை எதிர்கொண்டு, போராட்டங்கள் மூலம் தலைவர்களாக உயர்ந்துள்ளவர்கள் அறிமுகம் செய்யப் பட்டு பாராட்டப்பட்டனர்.   வரதட்சணைக்கொடுமையால் உயிரி ழந்தவர் வெண்ணிலா (25). திருமணமாகி 3 ஆண்டுகளில் தூக்கில் தொங்கிய துயர நிகழ்வை கண்ணீருடன் கூறினார் அவரது தாயார் நாகவல்லி. நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் மணக்குடியைச் சேர்ந்த இவர் தனது மகளுக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் உறுதுணையாக இருந்து வருவதை விவரித்தார். மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படும் அந்த தாயைப் பாராட்டி மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கதராடை அணிவித்தார். நாகவல்லி பேசுகையில், மகள் வெண்ணிலா எனக்கு தந்திருக்கும் பொன்னாடை இது என கண்ணீர்மல்க கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. மகளின் நினை வால் மேடையில் குமுறி அவர் அழுதபோது, மாதர் சங்கத் தலைவர்கள் அவரது கண்ணீ ரைத் துடைத்து  ஆறுதல் தெரிவித்தனர். ஆணவப்படுகொலையில்  தப்பிய அனுசுயா 2023 மார்ச் 17 இல் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் திருப்பூரில் வேலை பார்த்த சுபாஷும், அனுசுயாவும். சுபாஷ் வீட்டாரின் எதிர்ப்பை மீறி அந்த திருமணம் நடந்தது. 15 நாட் களுக்கு பிறகு சுபாஷின் தந்தை திருப்பூருக்கு வந்து அவர்களது திரு மணத்தை ஏற்றுக்கொள்வதாகவும், கிருஷ்ண கிரியில் ஊத்தங்கரை தாலுகா அருணபதி யில் உள்ள வீட்டுக்கு வருமாறும் அழைத்துள் ளார். கணவர் வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் சென்றபோது அனுபவித்த பெரும் துய ரத்தை விளக்கினார் அனுசுயா. “அரியலூர் மாவட்டம் பொன்னாவரம் எனது ஊர். நான் 2019 இல் எம்எஸ்ஸி வேதியியல் படித்து முடித்து வேலைக்கு சென்றேன். தம்பியை படிக்க வைத்தேன். வீடு கட்டினேன். சுபாஷும் நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். 15 நாட்களுக்கு பிறகு எதிர்ப்பை கைவிட்டதாக அவரது தந்தை அழைத்ததால் அங்கு சென்றோம். ஏப்ரல் 14 அதிகாலை 4 மணிக்கு சுபாஷின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த நானும் அவரது பாட்டி அன்னம்மாவும் அந்த அறைக்கு ஓடினோம்.  எனது கணவர் சுபாஷ் ரத்த வெள்ளத்தில்  கிடந்தார். எங்களையும் தாறுமாறாக வெட்டினார். அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். என்னிடம் மூச்சு இருக்கிறதா என பார்த்துவிட்டு வெளியேறினார். அருகில் உள்ள சுடுகாட்டுக்கு ஓடினேன். அங்கிருந்து ஒருவர் ஆம்புலன்ஸ் வரவழைத்து என்னை காப்பாற்றினார். எனக்கு 9 அறுவை சிகிச்சை  நடந்துள்ளது. இன்னும் 4 அறுவை சிகிச்சை  தேவை. மாதர் சங்க தலைவர் சுகந்தி அம்மாவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சாமுவேல்ராஜ் அப்பாவும் துணையாக இருக்கிறாங்க. சுகந்தி அம்மா சொல்ல 2 ஆண்டுகளில் பிஎட் படிப்பை முடித்துள்ளேன். நான் தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.  மயிலாடுதுறையிலும் சாதி ஆணவப்படுகொலை நடந்துள்ளது. கவின் மாதிரி இன்னும் சாதி ஆணவக் கொலைகள் நடக்கின்றன. அவற்றை தடுக்க தொடர்ந்து போராடுவேன்” என்றார். அவருக்கு கதராடை அணிவித்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா சிறப்பித்தார். மாவட்ட தலைவரான முர்ஷிதா செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி வல்லுறவு செய்த நபருக்கு எதிராக மாதர் சங்கத்தின் துணையுடன் போராடி வருபவர் முர்ஷிதா. அக்குழந்தைக் காக நீதி வேண்டி போராடி வருகிறார். குற்ற வாளியை கைது செய்ய வைத்ததுடன் அரசிட மிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயையும் பெற்றுத் தந்திருக்கிறது மாதர் சங்கம். இப்போது அவர் மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மாவட்ட தலைவர் பொறுப்பையும் ஏற்று பாதிக்கப்படும் மக்க ளுக்காக போராடுகிறார். அவரை பாராட்டி மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி கதராடை அணிவித்தார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மணியின் மகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார். குற்றவாளி போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வந்தவர் வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டினார். மாதர் சங்கத்தின் உதவியுடன் துணிச்சலாக அந்த வழக்கை நடத்தி வருகிறார். மாதர் சங்கத்தின் தருமபுரி நகர நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவரை சிறப்பித்து சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலா ளர் பி.சுகந்தி கதராடை அணிவித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல பெண்களை பேராசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்துள்ளார். அவர்களுக்கு உதவி வந்த துணை பேராசிரியையும் இதில் பாதிக்கப்பட்டார். துணிச்சலாக அந்த வழக்கை நடத்தி வருகிறார். மாநாட்டில் பிரதிநிதியாகவும் பங்கேற்றுள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த 3 பெண்கள்-  தங்கள் மகள்களான சிறுமிகள் பாலியல்  வல்லுறவுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட வர்கள். குற்றவாளிகள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படவும் தொடர்ந்து வழக்கை நடத்தவும் மாதர் சங்கம் உதவுவதாக தெரிவித்தனர்.