tamilnadu

புதுதில்லி மே 3ஆம் தேதி  நீட் தேர்வு மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

புதுதில்லி மே 3ஆம் தேதி  நீட் தேர்வு மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய  தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ் வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி  நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை ஞாயிறன்று அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பில், 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு, ஞாயி றன்று (பிப்., 8) முதல் மார்ச் 8ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கி லம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த  நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்  ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 10 முதல் மார்ச் 12ஆம் தேதி காலக்கெடு  உள்ளது. மே.3ஆம் தேதி (ஞாயிறு) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த  தேர்வு நடைபெறுகிறது. நீட் நுழைவுத் தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்  டுள்ளது. தேர்வு கட்டணம் நீட் நுழைவுத் தேர்வு எழுத தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் யாருக்கும் விலக்கு கிடையாது. பொதுப்  பிரிவினருக்கு ரூ.1,700, ஓபிசி பிரிவின ருக்கு ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திற னாளிகள் / மூன்றாம் பாலினத்தவர் களுக்கு ரூ.1,000 என கட்டணம் வசூலிக்  கப்படுகிறது. வெளிநாட்டு மையங்களில் தேர்வு எழுத விரும்பவோர்கள் ரூ.9,500  தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க  வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜெய்ப்பூர் ஓடும் ரயிலில் தீவிபத்து நூலிழையில் தப்பிய “ஸ்வர்ன் எக்ஸ்பிரஸ்” தில்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நோக்கி “ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ்” ரயில்  சென்று கொண்டு இருந்தது.  ஞாயிறன்று காலை 9 மணியளவில், ஜேத்தா சந்தன் அருகே ரயிலின் ஒரு பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை மற்றும் நெருப்பு வந்ததைக் கண்ட  பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழி யர்களுக்குத் தகவல் அளித்தனர். ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். ரயில்வே ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை விரை வாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த  உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்பட வில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு, ரயில்  மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.