tamilnadu

img

தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை

மதுரை, அக்.3- தேசியப் பாதுகாப்பு குறித்த விஷ யத்தில் நீதிமன்ற உத்தரப்படி மத்திய வெளியுறவு துறைக்கு கடிதம் அனுப்பு வதற்கு இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் தமிழக காவல்துறையும் காலம் தாழ்த்துவது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி யுள்ளது. இலங்கை கொழும்புவைச்  சேர்ந்த வர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா வில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக   இராமநாத புரம்  கேணிக்கரை காவல்துறையினர் கைது செது, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது இலங்கை யிலும் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட் கொணர்வு  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த நிலையில் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்களிருவரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு வைத் தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதை யடுத்து அவர்கள் புழல் சிறையிலி ருந்து விடுவிக்கப்பட்டனர். இடைபட்ட நேரத்தில் ஆட்கொணர்வு மனு விசார ணைக்கு வந்தது. அப்போது இந்த  மனுவை விசாரித்த  நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது எவ்வாறு அவர்கள்  விடுவிக்கப்பட்டனர். இது நாட்டின்  உள்நாட்டுப் பாதுகாப்பு தொ டர்புடையது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பி யிருந்தனர். மேலும் அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என அறிக்கை  தாக்கல் செய்யவும் உத்தரவிட்டி ருந்தனர். இந்த நிலையில் இந்த மனு  வியா ழனன்று நீதிபதிகள் வைத்தியநாதன்,  ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து தப்பி சென்ற விவகாரத்தில் இராம நாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். முகம்மது சப்ரஸ் இலங்கை சென்று விட்டாரா என்று அறிக்கை தாக்கல் செய்ய இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இராமநாதபுரம் காவல் கண்காணிப்பா ளர் அலட்சியமாகச் செயல்பட்டுள் ளார். தேசியப் பாதுகாப்பு குறித்து நீதி மன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், மத்திய வெளி யுறவுத்துறை  அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்ப ஏன் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தாமதப்படுத்தி னார். இதுகுறித்து அவர் நேரில் ஆஜ ராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக் கில் தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த் துள்ளது எனக்கூறி  வழக்கை அக்டோ பர் 15- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.