tamilnadu

img

மதுரை அருகே தலித் இளைஞர் மர்ம மரணம்... உரிய விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

மதுரை:
காதல் திருமணம் செய்தவர்கள் எங்கே எனக்கேட்டு ஒரு குடும்பத்தினரை கடந்த ஒருமாதமாக காவல்துறை சித்ரவதை செய்துவந்துள்ளனர். சித்ரவதை தாங்கமுடியாமல் காதல் திருமணம் செய்து கொண்டவரின்சகோதரர் வியாழனன்று மர்மமான முறையில்மரணமடைந்துள்ளார். காவல்துறையின் சித்ரவதையே இதற்குக் காரணமெனக்கூறி கிராமமக்கள் சுமார் ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவம்தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி., மனித உரிமைஆணையம் விசாரிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

இது தொடர்பாக கட்சியின் மதுரைபுறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கை:-

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கண்ணியப்பன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது  மகன்  இதயக்கனிஅதே ஊரைச் சேர்ந்த புனிதா என்றபெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து புனிதாவின் பெற்றோர்தனது மகள் மைனர் என்றும் கண்ணியப்பனின் மகன் இதயக்கனி கடத்திச் சென்றுவிட்டதாகவும் சாப்டூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல்துறையினர் கடந்த ஒரு மாதகாலமாக கண்ணிப்பன் குடும்பத்தை சித்ரவதை செய்துள்ளனர். இதன் உச்சமாக கண்ணியப்பனின் மகன் ரமேஷை புதனன்று மாலை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ரமேஷ் அணைக்கரைப்பட்டி பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.ரமேஷின் இறப்பிற்கு காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய சித்ரவதையும், டார்ச்சரும் தான் காரணம் என அவர்களது பெற்றோர் மட்டுமின்றி கிராமத்தினரும் கூறுகின்றனர். காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற நிலையில்ஒருவர் மர்மமான முறையில் மரணமடைவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. முதற்கட்டமாக சம்மந்தப்பட்ட காவல்சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ரமேஷின் இறப்பிற்கு காரணமான காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.