tamilnadu

img

சவூதி அரேபியாவில் மரணமடைந்தவர் குடும்பத்திற்கு ‘நவோதயா’ நிதி

சவூதி அரேபியாவில் மரணமடைந்தவர் குடும்பத்திற்கு ‘நவோதயா’  நிதி

நாகர்கோவில், ஜன. 6- சவூதி அரேபியாவில் மரணமடைந்த குமரி மாவட்டம் மாடத்தட்டுவிளையைச் சேர்ந்த பெர்னார்ட் குடும்பத்திற்கு ‘நவோத யா’ அமைப்பினர் நிதி உதவி வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்திட்டுவிளையைச் சேர்ந்தவர் பெர்னார்ட் (30). தந்தையுடன் இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். இவருக்கு மோனிஷா (26) என்கிற மனைவியும், 2 வயது மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம் பர் 27 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு சவுதியில் வைத்து பெர்னார்ட் மரண மடைந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர சவுதியில் செயல்பட்டு வரும் நவோதயா ஜூபைல் என்னும் கேரளத்தில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு உதவி செய்தது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 2 சனிக்கிழமையன்று நவோதயா அமைப்பினர் மாடத்திட்டுவிளைக்கு வந்து குடும்ப நிதிக்கான காசோலை அளித்த னர். இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், பெர்னார்டின் மனைவி மோனிஷாவிடம் வழங்கினார். இதில், நவோதயா ஜூபைல் முன்னாள் நிர்வாகி என்.பி. பென்னட் ராஜ்,  சிபிஎம் குருந்தங்கோடு வட்டார கமிட்டி செயலா ளர் ராஜு, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பி னர் விஜயகுமார், ஆற்றூர் கிளை செயலாளர் ஜோசப் லீனோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.