tamilnadu

img

சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக என்.சுப்பிரமணியன் தேர்வு

விழுப்புரம்,அக்.25- மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்  விழுப்புரம் மாவட்டச் செயலாள ராக என்.சுப்பிரமணியன் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 24 ஆவது மாநாடு அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் செஞ்சியில் தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, என். சங்கரய்யா அரங்கில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கட்சிக்கொடியை மூத்த உறுப்பினர் கே.எம்.ஜெயராமன் ஏற்றி வைத்தார். பிரதிநிதிகள் மாநாட்டில், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கை யை தாக்கல்செய்தார். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் நிறைவு ரையாற்றினார். செஞ்சி வட்ட செயலாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி நன்றி கூறினார்.  புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வுசெய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக என்.சுப்பிர மணியன்  தேர்வு செய்யப்பட்டார்.  அவர் உட்பட எஸ்.முத்துக்குமரன், பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், ஏ. சங்க ரன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, எஸ்.கீதா, எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன்,ஆர்.டி. முருகன் ஆகி யோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக தேர்வுசெய்யப்பட்டனர். தீர்மானங்கள் செஞ்சி அரசு பொதுமருத்துவ மனையை தரம் உயர்த்தி நவீன வசதி களுடன் கூடிய புதிய கட்டிடங்களை கட்டி விரிவாக்கம் செய்ய வேண்டும். வேளாண்விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, கரும்பு  விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய பாக்கித் தொகை யை உடனடியாக வழங்க வேண்டும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மழைக்காலங்களில் விவசாயிகளின் விளை பொருட்கள் நனையாமல் இருக்க புதிய ஏலக்கொட்டகைகள் கட்டடங்கள் கட்ட வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமைபடுத்த வேண்டும், செஞ்சிக்கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும், விழுப்புரம்மாவட்டத்தில் தொழிற்பேட்டை, கால்நடை மருத்துவ மனை, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.