கர்நாடக பேரவையிலும் உரையை வாசிக்க மறுப்பு ஆளுநரை எம்எல்ஏ-க்கள் முற்றுகை!
பெங்களூரு, ஜன. 22 - தமிழ்நாடு, கேரள மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநரும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆவேசமடைந்த ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், ஆளுநரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங் களை எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக சட்டப்பேரவையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வியாழக்கிழமையன்று காலை தொடங்கியது. மரபுப்படி மாநில ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி, கர்நாடக சட்டப்பேர வைக்கு வருகை தந்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல், அவர் சொந்தமாக தயாரித்த உரையை வாசிக்க முயற்சித்தார். இதற்கு அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உரையையே வாசிக்காமல் பேரவை யை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் ஆவேசமடைந்த ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அவரை வெளியேறவிடாமல் பாதையை வழி மறித்து கண்டன முழக்கங்களை எழுப்பி னர். இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலை யில், பாதுகாப்பு அதிகாரிகள் ஆளு நரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தி த்து பேசிய முதல்வர் சித்தராமையா, “ஆளுநரின் நடவடிக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 மற்றும் 163 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளு நர் தனது கடமையை நிறைவேற்ற வில்லை. அவரின் செயலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தை அணுகலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய்ந்து வரு கிறோம்” எனத் தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தீர்வு : மு.க. ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக ஆளுநரின் அடாவடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “முதலில் தமிழ்நாடு. பின் கேரளா. இப்பொழுது கர்நாடகம். இந்த நடைமுறை மிகவும் தெளிவானது மற்றும் திட்டமிடப்பட்டது. மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரையைப் படிக்க மறுப்பதன் மூலமும், கட்சி முகவர்களைப் போலச் செயல்படுவதன் மூலமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் சிறுமைப்படுத்துகின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான்” என தெரிவித்துள்ளார்.
