கல்யாண் மாநகராட்சியில் பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த ஷிண்டே
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநி லத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 122 உறுப்பினர்களைக் கொண்ட கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிகபட்சமாக ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலை மையிலான சிவசேனா 11 இடங்களிலும், நவநிர்மாண் சேனா (ராஜ் தாக்கரே) 5 இடங்களிலும், தேசியவாத காங்கி ரஸ் (சரத்) ஒரு இடத்திலும், 2 இடங்க ளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 62 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக் கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், கல்யாண் - டோம்பிவிலி மாநகரா ட்சியை கைப்பற்ற இரு கட்சிகளும் தனித்தனியாக காய் நகர்த்தி வரு கின்றன. இதனால் கல்யாண் - டோம்பி விலி மாநகராட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், கல்யாண் - டோம்பி விலி மாநகராட்சியை கைப்பற்ற சிவ சேனா (ஷிண்டே) எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உரிமை கோரி யுள்ளது. இது பாஜகவிற்கு கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா (உத்தவ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நவநிர்மாண் சேனா கட்சி தங்களுக்கு ஆதரவு அளிப்ப தாக சிவசேனா எம்.பி-யும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வின் மகனுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“நாங்கள் மாநகராட்சியில் ஆட்சி அமைக்க கொங்கண் ஆணைய ரிடம் பதிவு செய்துள்ளோம். நவ நிர்மாண் சேனா கட்சியும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது” என அவர் கூறினார்.
