மினி உலகக்கோப்பை கிரிக்கெட் 2025
வங்கதேசம் - நியூஸிலாந்து இன்று மோதல்
கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பி யன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீ ரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங் கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - நியூஸிலாந்து (குரூப் ஏ) அணிகள் மோதுகின்றன. இரண்டாவது வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூஸிலாந்து அணி யும், முதல் வெற்றியை பெறும் முனைப் பில் வங்கதேச அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறி யாக தீவிர பயிற்சியுடன் களமிறங்கு கின்றன. இதனால் இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரும் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படு
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
விழாக்கோலம் பூண்ட சென்னை கடற்கரை
மினி உலகக்கோப்பையின் 5ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஞாயிற்றுக் கிழமை அன்று துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை பொதுமக்கள் நேரலையில் காண சென்னை கடற்கரைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி சென்னை பெசன்ட் மற்றும் மெரினா உள்ளிட்ட 2 கடற்கரை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மிகப்பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. 2 கடற்கரை பகுதிளிலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர். இதனால் சென்னை கடற்கரை விழாக்கோலம் பூண்டது.
தடையுடன் சென்ற சின்னர்...
தோல்வியுடன் திணறும் முன்னணி வீரர்கள்...
களையிழந்த டென்னிஸ் உலகம்
டென்னிஸ் உலகில் கடந்த வாரம் ஒரு முக்கியமான சம்பவம் ஒன்று நிகழந்தது. அதிரடிக்கு பெயர் பெற்ற இளம் வீரரும், 13 மாதத் தில் அடுத்தடுத்து 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி 3 மாத தடையை பெற்றார். நல்ல பார்மில் விளையாடி வரும் சின்னர், பெடரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்), ஜோகோ விச் (செர்பியா) போன்று உரு வெடுப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழ லில், அவர் ஊக்கமருந்து சோதனை யில் சிக்கியது டென்னிஸ் உலகில் பெரி யளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், சின்னர் ஊக்க மருந்து தடையுடன் சிக்கலை எதிர் கொண்டுள்ள சூழலில், மற்ற முன்னணி வீரர்கள், இளம் வீரர்களிடம் தோல்வி யை பெற்று அவர்களும் விழிபிதுங்கி வருகின்றனர். சனிக்கிழமை அன்று நிறைவு பெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் 5க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்னிஸ் உலகம் களையிழந்துள்ளது.
கத்தார் ஓபனில் தோல்வியை தழுவிய முன்னணி வீரர்கள் :
ஜோகோவிச் (செர்பியா), அல்காரஸ் (ஸ்பெயின்), மெத்வதேவ் (ரஷ்யா), பெர்ரட்டினி (இத்தாலி), டி மினார் (ஆஸ்திரேலியா), பெலிக்ஸ் (கனடா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ரவுண்ட்ஸ், காலிறுதி, அரையிறுதி சுற்றுகளில் வெளியேறினார்.