மினி உலகக்கோப்பை கிரிக்கெட் 2025
இன்று தொடக்கம்
கிரிக்கெட் உலகில் மினி உலகக் கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் நாட்டில் புதன்கிழ மை அன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலி யா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி (ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள்) என 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு குரூப்பிலும் உள்ள 8 அணி கள் தங்களுக்குள் குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒருமுறை மோதிக் கொள்ளும். லீக் ஆட்டங்களின் முடிவில் 2 குரூப்பிலும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த 4 அணிகள் அரை யிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி முடிவில் இறுதிக்கு 2 அணிகள் முன்னேறும்.
இந்தியா - குரூப் பி குரூப் ஏ : ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் குரூப் பி : இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து
தொடக்க ஆட்டம் மினி உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூ ஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் கராச்சியில் புதன் கிழமை அன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கின்றன. இந்த ஆட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு
மினி உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா தவிர்த்து மற்ற 6 நாடுகள் (ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா) பாகிஸ்தான் நாட்டில் உள்ளன. இதனால் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மினி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நகரங்களில் ஊரடங்குக்கு இணையாக பாதுகாப்பு கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஐபி டிக்கெட்டுகளை புறக்கணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்
பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி தன்னுடைய விஐபி டிக்கெட்டை ரூ.94 லட்சத்து க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான (பிசிபி) மோஷின் நக்விக்கு விஐபி ஸ்டாண்டில் 30 இருக்கைகள் ஒதுக்க ப்பட்டன. இந்த இருக்கைக்கான டிக் கெட்டுகளை 4 லட்சம் திர்ஹாம் களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்தப் பணத்தை பிசிபியின் நிதி யாக பயன்படுத்த அவர் முடி வெடுத்துள்ளார். இதுகுறித்து பிசிபி வட்டாரங்கள் மூலம் வெளியான தகவலில், “மோஷின் நக்வி அவரது குடும்பத்தினர் மற்றும் உற வினர்களுக்கு விஐபி பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் அவர் சாதாரண இருக்கைகளில் ரசிகர்களுடன் இருந்து போட்டியை ரசிக்க விரும்புகிறார்” என கூறப் பட்டுள்ளது.
ஷார்ட்ஸ்
• தனது தந்தை காலமானதால் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மார்க்கல் (தென் ஆப்பிரிக்கா) மினி உலகக்கோப்பை தொடரில் இருந்து இடைக்காலமாக விலகியுள்ளார்
. • மினி உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் விலக, அவருக்கு பதிலாக கைல் ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
• “இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் சாம்பியன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்” என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசப் (யொகானா) கூறியுள்ளார்.