tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

மெட்டாவின் புதிய ஆம்னிலிங்குவல் ஏஐ!

மெட்டா நிறுவனம் தனது புதிய ஏஐ கட்டமைப்பான ஆம்னிலிங்குவல் ஏ.எஸ்.ஆர் (Omnilingual Automatic Speech Recognition) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள 1,600-க்கும் அதிகமான மொழிகளில் பேசப்படும் சொற்களைக் கேட்டு உரையாக மாற்றும் திறன் கொண்டது. இந்த அமைப்பு, மெட்டாவின் FAIR (Fundamental AI Research) குழுவினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500, குறைவாகப் பயன்படுத்தப்படும் அல்லது “லோ-ரிசோர்ஸ்” (Low resource) மொழிகள் உள்ளன. இந்த மொழிகளில் பல ஏஐ அமைப்புகள் மூலம் முதல் முறை யாக அங்கீகரிக்கப்படுகின்றன. இது தவிர, ஒரு பெரிய தரவுத்தொகுப்பான Omnilingual ASR Corpus-ஐ மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 350 அரிதான மொழிகளின்  ஆடி யோவில் இருந்து உரை வடிவிலான தரவுத்தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பை இயக்கும் “Omnilingual wav2vec 2.0” எனப்படும் புதிய பன்மொழி பேச்சு மாதிரியையும் வெளியிட்டுள்ளது. மெட்டாவின் இந்த பன்மொழிப் பேச்சு அங்கீகார (Omnilingual ASR) அமைப்பு, இந்தியாவிற்கு ஒரு பெரிய மைல்கல். மெட்டாவின் ஏஐ மாதிரிகள், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது எனப் பல முக்கிய இந்திய மொழிகளை ஆதரிக்கும் நிலையில், தற்போது அவதி, மைதிலி, சத்தீஸ்கரி மற்றும் துளு போன்ற பல இந்திய பிராந்திய மொழிகளை இந்த Omnilingual ASR ஆதரிக்கிறது.

குரூப் சாட் அம்சத்தை அறிமுகம் செய்த ஓபன் ஏஐ!

வாட்ஸ்அப்பில் உள்ளது போல், சாட்ஜிபிடி-யில் குரூப் சாட் அம்சத்தை  அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். சாட்ஜிபிடி-யின் குரூப் சாட்களில், கட்டுரை, குறிப்புகள், கேள்விகள் போன்றவற்றை பகிர்ந்து, சாட்ஜிபிடி-யிடம் அவற்றைச் சுருக்கவும், ஒழுங்குபடுத்தவும் கேட்டு,  அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த புதிய அம்சம் தற்போது பயில்நிலை (pilot) நிலையில்  உள்ளது. முதற்கட்டமாக ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் தைவான் போன்ற பகுதிகளில், ChatGPT Free, Go, Plus மற்றும் Pro பயனாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த அம்சத்தை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒய்-ஃபை பாஸ்வேர்டு மறந்துவிட்டதா? - இதை தெரிந்துகொள்ளுங்கள்

இன்றைய நவீன உலகில், ஒய்-ஃபை (Wi-Fi) நமது தினசரி வாழ்க்கையின் ஒரு அவசியமான பகுதியாகி விட்டது. இது இணையத்தை வயர்லெஸ் முறையில் பயன்படுத்த உதவுகிறது. இந்த சூழலில், உங்கள் ஒய்-ஃபை பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால், அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்று பார்ப்போம். பெரும்பாலான அமைப்புகள் ஒய்-ஃபை பாஸ்வேர்டை பாதுகாப்பாகச் சேமித்து வைக்கின்றன, இதனால் தேவைப்படும்போது அவற்றை மீட்டெடுக்கலாம்.  

விண்டோஸ்-இல் Wi-Fi பாஸ்வேர்டை பார்க்கும் முறை

முறை 1: 1) Network and Sharing Center-ஐ திறக்கவும் 2) உங்கள் கருவி இணைந்துள்ள Wi-Fi network பெயரைக் கிளிக் செய்யவும். 3) அதில் Wireless Propertiesஐ தேர்வு செய்யவும். 4) Security டேப்புக்கு சென்று, Show characters என்பதை டிக் செய்தால் உங்கள் Wi-Fi பாஸ்வேர்டை பார்க்கலாம். முறை 2: 1) Administrator அக்கவுண்டில் Command Prompt-ஐ திறக்கவும். 2) அதில் “netsh wlan show profile name=”NETWORK_NAME” key=clear” என்பதை Paste செய்து, NETWORK_NAME என்பதில் உங்கள் Wifi நெட்வெர்க் பெயரை இடவும். 3) Key Content பகுதியில் பாஸ்வேர்டை பார்க்கலாம். ஆண்ட்ராய்டு மொபைலில் Wi-Fi பாஸ்வேர்டை பார்க்கும் முறை 1) Settings;  Network & Internet; Wi-Fi பகுதிக்கு சென்று உங்கள் Wi-Fi பெயரை கிளிக் செய்யவும். 2) Share / QR Code என்பதைக் கிளிக் செய்யவும். காட்டப்படும் QR code-இன் கீழே பாஸ்வேர்டை பார்க்கலாம். ஐபோனில் Wi-Fi பாஸ்வேர்டை பார்க்கும் முறை 1) Settings; Wi-Fi பகுதிக்கு சென்று, உங்களின் நெட்வொர்க் பெயருக்கு அருகில் உள்ள info(i) என்பதை கிளிக் செய்யவும். 2) Password என்பதைத் தேர்வு செய்து Face ID / Touch ID உள்ளிட்டு பாஸ்வேர்டை பார்க்கலாம்.