தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கான பிரச்சனை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைப்பயண விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
