கல்வி சுற்றுலா வந்த மாணவர்கள்
குழந்தைகள் தினத்தையொட்டி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளியின் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளியன்று சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். பள்ளி தாளாளர் பரணிதரன் தலைமையில் நடந்த நிகழ்வில், லயன்ஸ் சங்கம் மற்றும் ரயில்வே பயணிகள் சங்கத்தினர் மாணவர்களை வரவேற்று பிஸ்கட் வழங்கினர். ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மோகன் ரயில்வே துறை, பாதுகாப்பு மற்றும் பயணச்சீட்டு முறைகள் குறித்து விழிப்புணர்வு அளித்தார்.
