tamilnadu

img

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

ஆடவர் இளையோர்  உலகக்கோப்பை ஹாக்கி  இந்தியா (தமிழ்நாடு) 2025

மதுரையில் தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த ஜெர்மனி

21 வயதிற்குட்பட்டோருக் கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொட ரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரை நகரங் களில் நடைபெற்று வருகிறது. வெள்ளி யன்று தொடங்கி (நவம்பர் 28) டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தி  வருகிறது. இந்தியா உட்பட மொத்தம் 24 நாடுகள் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், துவக்க நாளில் 8 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி (அதிக சாம்பியன் பட்டம் வென்ற ஆணியும் கூட) அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை  (குரூப் ஏ) புரட்டியெடுத் தது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் அதிரடி ஆட்டத்திற்கு மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் கரகோசங்களுடன் கைத் தட்டி பாராட்டுகளைத்  தெரிவித்தனர்.  தொடர்ந்து மதுரையில் நடை பெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் கனடா - அயர்லாந்து (குரூப் ஏ) அணி கள் மோதின. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில், கனடா அணி 4-3 என்ற கோல் கணக்கில் கடும் போராட்டத்துடன் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. அர்ஜெண்டினா அபாரம் 3ஆவது லீக் ஆட்டம் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா - ஜப்பான் அணிகள் (குரூப் சி) மோதின. இரண்டும் பலமான அணிகள் என்பதால், தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது.  பெல்ஜியம், ஸ்பெயின் கோல் மழை 4ஆவது லீக் ஆட்டத்தில் (மதுரை - ரேஸ்கோர்ஸ்) ஸ்பெயின் அணி 8-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை (குரூப் டி) வீழ்த்தியது. ஸ்பெயின் அணியின் கோல் மழை  மதுரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 5ஆவது லீக் (சென்னை ராதாகிருஷ்ணன்) ஆட்டத்தில் சீனாவை 3-5 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி  (குரூப் சி)  வீழ்த்தியது. 6ஆவது லீக் ஆட்டத்தில் (மதுரை - ரேஸ்கோர்ஸ்) 12-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் (குரூப் டி) பிரம்மாண்ட கோல் மழையுடன் நமீபியாவை வீழ்த்தியது. 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மஞ்சுநாத் 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொட ரின் 14ஆவது சீசன், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - பிரியான்ஷு ரஜாவத் (இந்தியா) மோதினர். 21-14,  11-4 என்ற செட் கணக்கில் கிடாம்பி முன்னிலை பெற்று இருக்கும் போது,  ரஜாவத் காயம் காரணமாக வெளி யேறினார். இதன்மூலம் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி னார். இதே பிரிவின் மற்றொரு காலி றுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சு நாத் - மன்ராஜ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13  என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று  அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.