tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

இணையம் இல்லாமல் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்துவது எப்படி?

கூகுள் மேப்ஸ்  (Google Maps) என்பது  2005ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இணைய வரைபட சேவை ஆகும். இது உலகின் 74 மொழிகளில் கிடைக்கிறது. இதில் போக்குவரத்து நெரிசல் கண்டறியும் அம்சம், ஏஐ  உதவியுடன் கூடிய தேடல் வசதி,  நீண்ட பயணங்களில் பேட்டரி சேமிக்கும் அம்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி, இணையம் இல்லாத சூழலி லும் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்த வரைபடங்களைப் பயன் படுத்தும் (Offline Mode) அம்சமும் உள்ளது. கூகுள் மேப்ஸ்-இல் இணையம் இல்லாத சூழலில் கூட வழியைத் தெரிந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். Offline மேப்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்வது: இணையம் இருக்கும்போது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின்  வரைபடத்தை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலில், கூகுள் மேப்ஸ்-ஐ திறந்து, Search bar-இல் நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை (உதார ணம்: Coimbatore) கொடுத்தால், அதில் இடத்தின் தகவல் திரை (Place Info) திறக்கும். அதில் கீழே  வரும் “Download” என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். “Download” என்ற ஆப்ஷன் காண்பிக்கவில்லை என்றால், மேலுள்ள மூன்று புள்ளிகளை (:) கிளிக் செய்து “Download offline map” என்பதை தேர்ந்தெடுக்கவும். பதிவிறக்க வேண்டிய பகுதியை மேப்ஸ்-இல் zoom in அல்லது zoom out செய்து, தேர்வு செய்து “Download” என்பதை கிளிக் செய்தால், அந்த பகுதி offline map-ஆக உங்கள் போனில் சேமிக்கப்படும். Offline மேப்ஸ்-ஐ SD கார்டில் (மெம்மரி கார்டு) சேமிக்கவும் முடியும். இந்த offline மேப்ஸ்-ஐ update / delete செய்யலாம்.  பயணத்திற்கு முன், குறிப்பாக network coverage குறைவான இடங்களுக்கு செல்லும் போது, Offline Maps பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் offline mode-இல், நேரடி போக்குவரத்து அப்டேட்கள், போக்குவரத்து நெரிசலின்போது மாற்றுப்பாதைகள், நிகழ்நேர சாலை தடுப்புகள் மற்றும் விபத்து ஏற்படக்கூடிய இடங்கள் குறித்த தகவல்கள் பெற முடியாது.

வாட்ஸ்அப்பில் இந்த சாட்பாட்களுக்கு விரைவில் தடை!

2026-ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் வாட்ஸ்அப்பில் மூன்றாம் தரப்பு ஏஐ சாட்பாட்களான ChatGPT மற்றும் Copilot ஆகியவை செயல்படாது என மெட்டா நிருவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகளை (Terms of Service) புதுப்பிக்கிறதாகவும், அந்த புதிய வழிகாட்டுதல்கள், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ கருவியை தவிர, மூன்றாம் தரப்பு ஏஐ சாட்பாட்களை, பயனர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம், 2026 ஆண்டு ஜனவரி 15 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. OpenAI மற்றும் Microsoft ஆகிய இரு நிறுவனங் களும், அந்தக் காலக்கெடு வருவதற்கு முன்பே தங்களது chatbot இணைப்புகளை (integrations) திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.