‘வேள்பாரி’க்கு விழா எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சு.வெங்கடேசனின் படைப்பு உலக வாசகர்களை எட்டினால் நோபல் பரிசு வாய்ப்பு உண்டு : எம்.ஏ. பேபி பாராட்டு
தில்லி கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் ஆகஸ்ட் 5 அன்று மாலை நடைபெற்ற ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ வெற்றி விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவல் 1 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்ததையொட்டி, அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் உரை நிகழ்த்திய தலைவர்களின் கருத்துகள் வருமாறு: