tamilnadu

img

மே 20 வேலை நிறுத்தம் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும்

மே 20 வேலை நிறுத்தம் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் 

மின் ஊழியர் கூட்டமைப்பு உறுதி

கோவை, மே 7- தொழிலாளர்களை மதத்தாலோ, மொழியாலோ, சாதியாலோ பிரிக்கும் சூழ்ச்சியை முறியடித்து, தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் இருக்கும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் பேட்டியளித்தார். மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்திட வேண்டும். மின்துறை மற்றும் அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும். நான்கு தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளை ரத்து செய்திட வேண்டும். மின்சார சட்ட திருத்த திட்டத்தை திரும்பபெற்றிட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மே-20 அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருத்தரங்கம் கோவை காந்திபுரத்தில் உள்ள கோயமுத்தூர் மலையாள சமாஜத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 ஆம் தேதியன்று 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மையமாகும் நடவடிக்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றனர். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கின்ற ஏற்பாடு தொழிற்சங்கம் என்பது அடிப்படை உரிமை சங்கம் வைக்கும் உரிமையை மறுக்கின்ற ஏற்பாடு. இதுபோன்று தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கின்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. தொழிலாளர்களை மதத்தாலோ, மொழியாலோ, சாதியாலோ பிரிக்கும் சூழ்ச்சியை முறியடித்து, தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் இருக்கும் என்றார். இந்த வேலை நிறுத்த கருத்தரங்கில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.