tamilnadu

img

மே 20-நாடு முழுவதும் ஊராட்சி அலுவலகங்கள் முற்றுகை

மே 20-நாடு முழுவதும் ஊராட்சி அலுவலகங்கள் முற்றுகை

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ. 2.5 லட்சம் கோடி ஒதுக்குக!

விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட் அறிவிப்பு

மதுரை, ஏப்.20- 100 நாள் வேலைத்திட்ட நிலு வைத்தொகை ரூ.4,034 கோடியை  விடுவிக்க வேண்டும். ஒட்டு மொத்தத் திட்டத்திற்கு ரூ. 2.5 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 20 ஆம்  தேதி நாடு முழுவதும் ஊராட்சி அலு வலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று  அகில இந்திய  விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பி.வெங்கட் மதுரையில் அறிவித்தார்.  அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின்  மாநிலக் குழுக் கூட்டம் மதுரையில் சனிக் கிழமையன்று மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பொதுச் செயலாளர் பி. வெங்கட், அகில இந்திய துணைத்  தலைவர் ஏ.லாசர், மாநிலப்பொதுச்  செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் அ.பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் அகில  இந்திய தலைவர் பி.வெங்கட் செய் தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதுதான்  ஒன்றிய அரசு என்பதை பாஜகவால் ஏற்பதற்கு  மனமில்லை. சமூக நலத்திட்டங் களுக்கான நிதியை பெருமளவு வெட்டிச் சுருக்கிவிட்டது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. . நடப்பு நிதியாண்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானதல்ல ;இதை ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.

91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

100 நாள் வேலைத் திட்ட நிதி  நிலுவைத் தொகையாக ரூ.4,034 கோடியை வழங்குவதில் ஒன்றிய  அரசு தாமதம் செய்வருகிறது.  நான்கரை மாதங்களுக்கும் மேலான, இந்த நியாயமற்ற  தாமதத்தால் 91 லட்சம் தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86 சதவீதம் பேர் பெண்கள், 29 சதவீதம் பேர் பட்டி யல் சமூகத்தினர், பட்டியல் பழங்கு டியினர் மற்றும் ஒரு லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஒன்றிய அரசு ரூ.4,034 கோடியை உட னடியாக விடுவிக்க வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்கள், மக்க ளவை, மாநிலங்களவை உறுப்பி னர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவது போல் விவசா யத் தொழிலாளர்களுக்கு மாதாந் திர ஓய்வூதியமாக ரூ.6,500 வழங்க  வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அகில இந்திய  விவ சாயத் தொழிலாளர்கள் சங்கமும்  பங்கேற்கிறது. அன்றைய தினம்  ஊராட்சி அலுவலகங்களை விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிடுவார்கள்.  100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. இதனை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ரூ.17 ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலை என்பது விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்தது. தமிழகத்தில் 100 நாள் வேலைக்கான கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். அதே நேரத் தில் குறைந்தபட்ச கூலியாக, தமிழ்நாட்டில் விவசாயம் தொடர் பான வேலைகளுக்கு ரூ.292 மட்டுமே  வழங்குகிறது. கடந்த நான்காண்டுகளாக இந்தத் தொகை உயர்த்தப்பட வில்லை. விவசாயத் தொழிலாளர் களுக்கான கூலியை தமிழக அரசு  உயர்த்த வேண்டும். இந்தியாவில் 30 சதவீத நிலங் கள் ஐந்து கார்ப்பரேட்டுகளிடம் குவிந்துள்ளன. எஞ்சியுள்ள 70 சத வீத நிலங்கள் தொழிற்சாலை களாக, வணிக வளாகங்களாக, குடி யிருப்புகளாக மாறிவருகின்றன. விவசாயத்திற்கான நிலப்பரப்பு குறைந்து வரும் தருணத்தில் கார்ப்பரேட்டுகள் விளை நிலங் களை கபளீகரம் செய்துவரு கின்றன. மோடி அரசு அதானி, அம்பானிகளுக்கான அரசு. அது  தனது செயல்பாட்டை நாக்பூரில்  உள்ள ஆர்எஸ்எஸ் அலுவல கத்தில்  நடத்தி வருகிறது. இந்துத்துவா, ஆளுநரின் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தமிழக அரசு தீவிர மாக உள்ளது. இந்த நடவடிக்கை  பாராட்டுக்குரியது. அதே போல்  நிலமற்ற  விவசாயத் தொழிலாளர் களுக்கு நிலம் வழங்கி அவர்களின்  பாராட்டுதல்களையும் பெற வேண் டும்.  நிலமற்ற விவசாயத் தொழி லாளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுசெல்வோம்.

பெண் விவசாயத் தொழிலாளர் சிறப்பு மாநாடு

 மே 9, 10 ஆகிய தேதிகளில்  கேரளம் மாநிலம் மலப்புரத்தில் பெண் விவசாயத் தொழிலா ளர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு  நடைபெறவுள்ளது. தமிழகத்தில்  ஐந்து லட்சம் விவசாயத்தொழி லாளர்  குடும்பங்களை சந்திக்க  உறுதியேற்றுள்ளோம்.  நாட்டின்  ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க  உறுதி மிக்க போராட்டங்களை நடத்து வோம். இவ்வாறு அவர் கூறினார்.  
 

விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுக!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், விவசாயப் பணிகளை முடித்து விட்டு சொந்த ஊருக்குச் சென்ற  மூன்று விவசாயத் தொழிலா ளர்கள் உயிரிழந்தனர். அவர்களது  குடும்பத்திற்கு ரூ, 5 லட்சம் நிதி  வழங்க வேண்டும். படுகாய மடைந்த ஐந்து பேருக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என்று விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.