இளைஞர்களை ஆட்டுவிக்கும் வணிகமயமான கிரிக்கெட்
இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென்று கேட்டால் பலரும் ஹாக்கியை மறந்து கிரிக்கெட் என்றே கூறுவார்கள். அந்த அளவிற்கு நாடு முழுவதும் கிரிக்கெட் மோகம் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி உள்ளது. உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிகள், ஐபிஎல் என எந்தப் போட்டிகள் வந்தாலும் இளை ஞர்களின் பேச்சுக்களில் கிரிக்கெட் நிறைந் திருக்கும். குறிப்பாக ஐபிஎல் என்றால் சொல் லவே வேண்டாம். கோடிக்கணக்கான ரூபாய் புரளும் இந்த விளையாட்டில் வீரர் கள் ஏலம் எடுக்கப்படுவதும், அணிகள் மோதிக்கொள்வதும் வணிகமயத்தின் உச்சம். இந்த அணி ஜெயிக்கும், அந்த அணி ஜெயிக்கும் என ஆன்லைனில் பணம் கட்டி வாழ்க்கையை தொலைத்த இளை ஞர்களின் கதைகள் ஏராளம். இளைஞர் களை ஆட்டிப்படைக்கும் கிரிக்கெட், இந்தி யாவின் மிகப்பெரிய வணிகமயமான விளை யாட்டுகளில் முதன்மையானதாக விளங்கு கிறது. சிறிது காலத்திற்கு முன்புவரையில் கிரா மம் முதல் நகரம் வரை இளைஞர்களும் மாணவர்களும் விளையாட பொதுவான மைதானங்கள் இருந்தன. அவை பெரும்பா லும் அடுத்தவர் நிலமாகவோ அல்லது அரசு புறம்போக்கு இடமாகவோ இருக்கும். விடு முறை நாட்களில், குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் அங்கு நடை பெறும். ஆனால், இன்று விளையாட்டு மைதா னங்கள் சுருங்கிவிட்டன. காலியிடங்களை அடுக்குமாடி குடியிருப்புகளும் அரசு அலு வலகங்களும் ஆக்கிரமித்துக்கொண்டதால், விளையாட இடமின்றி தவித்த இளைஞர்கள் பலர் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்குள் புகுந்துவிட்டனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை குறிவைத்து தரைதள விளையாட்டு மைதானங்கள் உரு வாகி வருகின்றன. பொதுவான மைதானங் களில் நேரம், காலமின்றி எந்த விளையாட்டை யும் விளையாடலாம். ஆனால், இந்த தரை தள கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து மைதானங்களில் பணம் செலுத்தி னால் மட்டுமே விளையாட முடி யும் என்ற நிலை உருவாகியுள் ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திர குமார் இதுகுறித்து கூறுகை யில், “நான் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய காலியிடங்கள் இருந்தன. பள்ளி முடிந்து வந்ததும் மாலை நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தோம். ஆனால், இப்போது அந்த இடங்களெல்லாம் கட்டிடங்க ளாக மாறிவிட்டன. கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத் தால் விளையாட இடமில்லாமல் தவித்த எங்க ளுக்கு, எங்கள் வீட்டருகே புதிதாக உருவான தரைதள மைதானம் (Turb ground) ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், இங்கே விளையாடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்கிறார்கள். மற்ற விளையாட்டுகளுக்கும் இதே நிலை தான். விளையாட்டில் அதிக ஆர்வம் இருந் தும், வேறு இடங்கள் இல்லாததாலும் வேறு வழியின்றி பணம் செலுத்தி விளையாடுகி றோம். 10 முதல் 15 பேர் வரை சேர்ந்து விளை யாடுவதால் ஒரு நபருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே செலவாகிறது என்பதால் பெரியதாகத் தெரியவில்லை. ஆனாலும், பொதுவான மைதானங்களில் விளையாடுவதற்கும் இதற்கும் நிறைய வித் தியாசம் இருக்கிறது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம், யாரும் பணம் கேட்க மாட்டார்கள். ஆனால், இங்கே குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட முடி கிறது. சில சமயங்களில் கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போது நேரம் முடிந்து விட்டதால் பாதியிலேயே விளையாட்டை நிறுத்த வேண்டியிருக்கிறது. இந்த தரைதள விளையாட்டு பாதுகாப்பானதாகவும், எளி மையானதாகவும் தோன்றினாலும், முன்பு நாங்கள் விளையாடிய கிரிக்கெட் போல இது இல்லை என்பதே உண்மை. முன்பு சாதாரண கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சமூகத் தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் திறமை களை வெளிப்படுத்துவார்கள். அப்படி விளை யாடி மாவட்ட அளவில் சென்ற வீரர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த தரைதள விளையாட்டில் அதற்கெல்லாம் இடமில்லை. காசு உள்ளவனுக்கு மட்டுமே உள்ளே அனு மதி என்ற நிலை இருக்கிறது,” என்று வருத்தத் துடன் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத விளை யாட்டு மைதானத்தை நிர்வகிக்கும் உரிமையா ளர் ஒருவர் கூறுகையில், “தற்போது விளை யாட்டு மைதானங்கள் மிகவும் குறைந்து விட்டன. சிறிய மைதானங்கள் இருந்தாலும், அங்கு கிரிக்கெட் விளையாடினால் பந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்றுவிடு கிறது அல்லது வேறு பிரச்சனைகள் வரு கின்றன. இதற்கு தீர்வாகத்தான் என் சொந்த இடத்தில் இந்த மைதா னத்தை உருவாக்கினேன். டென் னிஸ், கிரிக்கெட் மைதானங் களை உருவாக்கவே 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை செல வாகிறது. தமிழகத்தின் பல இடங்களிலும் இது போன்ற தரைதள விளை யாட்டுகள் பிரபலமாகி வருகின்றன. இங்கே விளையாடும்போது குடும்பமாக இளம் பெண்கள், திருமணமான பெண்கள் தங்கள் கணவர், சகோதரர்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடிச் செல்வதையும் பார்க்கிறோம். நானும் சிறுவயதில் பொதுவான மைதானங் களில்தான் கிரிக்கெட் விளையாடினேன். ஆனால், இப்போது எல்லாமே வணிகமயமாகி விட்ட நிலையில் கிரிக்கெட் விளையாட்டும் வணிகமாகிவிட்டது. இதில் சோகமான விஷ யம் என்னவென்றால், வசதியுள்ள இளைஞர் கள் பணம் கட்டி விளையாடுவது பெரிய விஷய மில்லை. ஆனால், ஏழை எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை இதுபோன்ற வணிகமயமான விளையாட்டுகள் கிட்டக்கூட விடாமல் செய்து விடும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார். இளைஞர்களின் நாடி நரம்புகளில் ஊறிப் போன கிரிக்கெட் விளையாட்டு, இன்று வணிக மயமான சூழலில் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை காசாக்கி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அதேநேரத்தில், அரசுப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதா னங்கள் தற்போது, வணிக வளாகங்கள் கட்டப்பட்டு காசு பார்க்கும் வேலையை உள் ளாட்சி நிர்வாகங்கள் செய்து வருவது கிரிக் கெட் விளையாட்டை மட்டுமல்ல மொத்த மாக விளையாட்டையே ஊணப்படுத்தும் செயல் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் விமர்சனமாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்கவில்லையே என்று ஆட்சியாளர்கள் ஆதங்கப்படுவதில் எந்த நியாயமும் இல்லை. மாவட்டங்கள், கிராமங்கள் தோறும் விளை யாட்டு மைதானங்களை உருவாக்கிவிட்டு, உரிய பயிற்சிகளை நமது இளைஞர்களுக்கு கொடுத்தால், நிச்சயம் பதக்க கனவு மெய் ய்ப்படும். செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.