பட்டினிச் சாவிலிருந்து மரவள்ளி விவசாயி களைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உட்பட 21 மாவட்டங் களில் நடப்பாண்டு 3 லட்சம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டதில், 70 சதவீத அறு வடை முடிந்துவிட்டது. கடந்தாண்டு 88,663 ஹெக்டேரிலும், நடப்பாண்டு 98,832 ஹெக்டேரி லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 10,000 ஹெக்டேர்தான் கூடுத லாக சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு ஒரு டன் ரூ.16,000 வரை விலை கிடைத்தது. நடப்பாண்டு விலை மிக மோசமாக குறைந்து ஒரு டன் ரூ.4000 முதல் 5000 வரை தான் விவசாயிகளுக்கு விலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த சூழலில் சேலத்தில் இயங்கி வரும் சேகோசர்வ் அலுவலகத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் 5.2.2025 அன்று முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், குறைந்தபட்சம் ஒரு பாயிண்ட்டுக்கு ரூ.300 கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விலை கொடுத்தாலும், டன்னுக்கு ரூ.8000 தான் விவசாயிகளுக்கு விலை கிடைக்கும். இந்த விலையைகூட முத்த ரப்பு கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் தற்போது கொடுத்து கொள்முதல் செய்வ தில்லை. இதன் காரணமாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநில அரசு உடனடியாக தலை யிட்டு முத்தரப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட, பாய்ண்ட் ஒன்றுக்கு ரூ.300 விவசாயிகளுக்கு விலை கிடைத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சேகோசர்வ்-க்கு வராமல் வெளியே விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க உறுதி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முத்தரப்பு கமிட்டி ஒன்று அமைத்து, அறுவடை காலங்களில் வாரம் ஒருமுறை கூடி, விலையை கண்காணிக்கும் முறையை உருவாக்கிட வேண்டும்.
மரவள்ளி உற்பத்தியாளர்களையும், சேகோ சர்வ்-இல் உறுப்பினர் ஆக்குவது குறித்து அதன் சட்டத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். தற்போது அசோசியேட் மெம்பர் ஆக லாம் என்ற பைலா படி சேர்க்கையை உடனடி யாக துவங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் ரேசன் கடையில் ஜவ்வரிசி விற்பனையை உடனே துவக்கிட வேண்டும் ஆகிய முடிவுகளை செயல்ப டுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கப்பல் மாலுமிகளுக்கு ஓய்வூதியம் வழங்குக!
ப்பல் மாலுமிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மாலுமிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங் களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளி லும் சுமார் 25 ஆயிரம் மாலுமிகள் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி இந்திய நீர்வழிப் போக்கு வரத்துத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் டி.நரேந்திரராவ், ‘பார்வர்ட் சீமென்ஸ் யூனியன் ஆப் இந்தியா’ சார்பில் மாலுமி ஐஸ்வர்யா பிலங்கர், முனை வர் சஞ்சய் சாஹி விக்ரம் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்திடம் மனு அளித்து பேசினர். அம்மனுவின் சுருக்கம் வருமாறு: இந்தியா மற்றும் அயல் நாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் ஆயிரக்கணக் கான மாலுமிகளுக்கு ‘பார்வர்ட் சீமென்ஸ் யூனியன் ஆப் இந்தியா’ செயல்படுகிறது. கப்பல் வாணிபத்தி லும், கடல்சார் துறையிலும் முக்கியப் பங்காற்றுவதுடன் தேசத்தின் இரண்டா வது பாதுகாப்பு அரணாகவும் மாலுமிகள் திகழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் மாலுமிகளில் பலர் கப்பலில் பணி யாற்றுகின்றனர். ஒரு பகுதியினர் ஓய்வு பெற்றவர்களாக உள்ளனர்.
உலகளா விய கப்பல் போக்குவரத்துத் துறை வர்த்தகத்தில் 90 விழுக்காட்டினர் இந்திய மாலுமிகளாக உள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில், சர்வதேச கடல்சார் அமைப்பு இவர் களை முக்கியப் பணியாளர்கள் என்று அங்கீகரித்தது. இந்த மாலுமிகளுக்கு ஓய்வூதியம் இல்லாததால், பலரும் ஏழ்மை நிலை யில் உள்ளனர். கோவா போன்ற கடல்சார் மாநிலத்தில் 2,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
அதே போன்று தமி ழகத்திலும் ஓய்வூதியக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) உறுப்பினராக உள்ளதுடன், ‘கடல்சார் வணிக தொழிலாளர் மாநாடு - 2006’ஐ அங்கீகரித்துள்ள இந்தியா, இத்தகைய பிரிவினருக்கு ஒரு விரி வான ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்தவில்லை. எனவே, கோவாவை விட ஒரு மேம்பட்ட ஓய்வூதியக் கொள்கையை தமிழக அரசு செயல் படுத்தி இந்தியாவிற்கு முன்னோடி யாக திகழ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமைச் செயலாளர், முதலமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்திருப்பதாக டி. நரேந்திரராவ் தெரிவித்துள்ளார்.