tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் முயற்சியால் இலவச வீட்டு மனை பட்டா சிறுபான்மையின மக்கள் நன்றி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகரில் சிறுபான்மை மக்கள் வாடகை வீட்டிலும், கூட்டுக் குடும்பமாகவும், புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தனர்.  அந்த மக்கள் நிரந்தரமாக குடியிருப்பதற்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக,  செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில்  முதல் தவணையாக 15 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.  பட்டாவை பெற்றுக் கொண்ட சிறுபான்மை மக்கள் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்திற்கு வந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வனுக்கு சால்வை அணிவித்து, செங்கொடி இயக்கத்திற்கு  நன்றி தெரிவித்தனர்.  இந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்டத்  தலைவர் யாசர் அராபத், மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் ஷேக் இஸ்மாயில் ஷரீப், சிபிஎம் வட்டார செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். வேலூரில் “போலீஸ் அக்கா”  திட்டம் தொடக்கம் வேலூர், பிப்.19-  வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “போலீஸ் அக்கா” என்ற திட்டம் செவ்வாயன்று (பிப்.18) முதல் தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 308 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 113 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட பெண் காவலர்களிடம், மாணவிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் அல்லது அது சார்ந்த வேறு பிரச்சனைகளை கூறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு சென்னை, பிப்.19- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. ரூ.65 உயர்ந்தும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.560ம், 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.440-ம் உயர்ந்துள்ளது.