சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் கொள்கைகளை நிறைவேற்றுவோம்
தோழர் ம.சிங்காரவேலர் கொள்கைகளை இந்த மண்ணிலே அமல்படுத்தும் மகத்தான பணியை மேற் கொள்வோம் என்று வட சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். சிந்தனை சிற்பி ம.சிங்கார வேலர் 165ஆவது பிறந்த நாளையொட்டி “சென்னையை தோழர் சிங்கராவேலர் சென்னையாக்குவோம்” என்ற முழக்கத்தோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு கூட்டம் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் தண்டையார் பேட்டையில் செவ்வாயன்று (பிப். 18) நடைபெற்றது. ஆர்,கே. நகர் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், தோழர் சிங்காரவேலர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல சிறந்த வணிகராகவும் பணி யாற்றியவர்.
வாழ்க்கையில் நிறைய சொத்துகளை சேர்த்த குடும்பம்தான் சிங்காரவேல ரின் குடும்பம். ஆனாலும் மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவர் தன்னை கம்யூ னிஸ்டாக மாற்றிக்கொண் டார். தமிழகத்தில் இன்றைக்கு எத்தனையோ சீர்திருத்த பகுத்தறிவு இயக்கங்கள் இருந்தாலும், இவைகளுக் கெல்லாம் விதை போட்டவர் சிங்காரவேலர் என்று சொன் னால் அது மிகையாகாது. இன்றைக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்காரவேலர் காலத்தில் தொழிற்சங்கம் வைப்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏதோ ஒரு தொழிற்சங்கத்தை அமைத்து விட்டு அமைதியாக போராடிக் கொண்டிருக்கும் காலம் அல்ல அந்த காலம். தொழிற்சங்கம் வைப்பதற்கே உரிமையில்லாத அடக்கு முறை நிறைந்த காலத்தில் தொழிற்சங்கத்தை அமைத்தது மட்டுமல்லாமல் பி&சி போன்ற தொழிற்சாலைகளில், தொழி லாளர்கள் அடிப்படை உரிமை களுக்காக போராடி முதன் முதலில் குரல் கொடுத்தவர் அவர். திருவிக,சர்க்கரை செட்டி யார் போன்றவர்களோடு இணைந்து தொழிற்சங்க இயக்கத்தை சென்னையில் தமிழகத்தில் உருவாக்கிய மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்தார். இந்தியாவிற்கு பரிபூரணமான விடுதலை வேண்டும் என்றால் அது தொழிற்சாலையிலே பணி யாற்றக்கூடிய தொழிலா ளர்களை மட்டும் திரட்டி போரா டினால் போதாது, கிராமப் புறங்களில் பட்டி தொட்டிக ளிலே இருக்கிற விவசாயிக ளையும், விவசாயத் தொழிலா ளர்களையும் இணைத்து வர்க்க போராட்டத்தை நடத்துவதன் மூலம்தான் ஒரு அடிப்படை சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று உறுதியுடன் கூறினார். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன் இரு வரும் செய்தியாளர்கள் சந்திப்பில், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் தான் இந்த நாட்டின் நீதி பரிபால னம் செய்யக்கூடிய அமைப்பு களாக இருக்கிறது. அப்படிப் பட்ட நீதிமன்றங்களில் பெரும் பகுதி நீதிபதிகள் பிராமணர் களாகத்தான் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் சிங்கார வேலர் காலத்தில் எப்படி இருந்தி ருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு வரலாற்று நாயகனாக, இந்திய உழைப்பாளி மக்களின் தலைவனாக, கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவராக திகழ்ந்த சிங்காரவேலரின் கொள்கை களை இந்த மண்ணிலே அமல்படுத்தும் அந்த மகத் தான பணியை நாம் நிறைவேற்றுவோம் என்றார். அமெரிக்காவில் சட்டவிரோ தமாக தங்கி இருக்கும் இந்தி யர்களை, ஏதோ குப்பையை கொண்டு வந்து கொட்டுவது போல் கொட்டிக் கொண்டி ருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கக்கூடிய 4ஆவது உலகத் தலைவர் மோடிதான். எனவே மோடி சென்றால் எல்லாம் சரியாகி விடும் என்று பலரும் கூறி னார்கள், எழுதினார்கள். மோடி போய் அங்கே அதிபருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, இந்தியர்களுக்கு விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தனர். சட்டவிரோதமாக குடியிருப் பவர்களை வெளியேற்றுவது அவர்களின் உரிமை. ஆனால் அதற்கு ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா? ஆண்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என அனைவரை யும் கொண்டு வந்து குப்பைக் கழிவுகளை போல கொட்டு கிறார்கள். எவ்வளோ பெரிய அவமானம் இது. இதற்கு எதிராக இந்திய அரசு கொந்த ளித்து இருக்க வேண்டாமா? மோடி கொதித்து எழுந்திருக்க வேண்டாமா? சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணா மலை இப்படிப்பட்ட சம்பவம் நடந்த போது, செருப் பால் அடித்துக் கொள்வாரா? இதை வெளிப்படுத்தும் விதமாக ஆனந்தவிகடன் விலங்கிடப்பட்ட மோடியின் படத்தை போட்டுள்ளது. உடனே ஒன்றிய அரசு கொதித்தெழுந்து ஆனந்த விகடன் வலை தளத்தை முடக்கி விட்டது. மோடி போய் அங்கே அதிபரு டன் உட்கார்ந்து இருக்கும் போதே, இந்தியர்களின் கையில் விலங்கு மாட்டியதை, உங்களுக்கு மாட்டியது போல் கருத்து படம் வெளியிட்டால், உடனே இணையதளத்தை