பெஞ்சல் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 5,18,763 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 498 கோடி வரவு அமைக்கப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு விழாக்களில் பங்கேற்கிறார். 21ஆம் தேதி மாலை கடலூரில் நடைபெறும் விழா விற்கு மேடை மற்றும் பந்தல் அமைப்பு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,18,763 விவ சாயிகள் பயனடையும் வகையில் ரூ.498 கோடி விவசாயிகள் கணக்கில் வர வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறி வித்தார். அதன் அடிப்படையில், இதன் மூலம் 5,18,763 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை இந்த மாத இறுதி யில் காப்பீட்டுத் தொகை நிறுவனங்கள் வரவு வைக்கப்படும் என்றார்.