புதுச்சேரி மின் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்பக் கோரி ஊழியர்கள் பொறி யாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான நியமன விதி களில் திருத்தம் செய்து ஊழியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நேரடி நிய மனங்கள் நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள கவுரவ ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்துறை தலைமை அலு வலகம் முன்பு இந்த போராட்டம் நடை பெற்றது. மின்துறை ஊழியர், பொறியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி னார். போராட்டக் குழு ஆலோசகர் ராம சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார். போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மின் துறை ஊழி யர்கள் பணியை புறக்கணித்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.