மதுரையில் 84 பேருக்கு தொற்று பாதிப்பு
மதுரை:
மதுரையில் ஞாயிறன்று புதிதாக84 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மதுரையில் 622 பேரும், விருதுநகரில் 739 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஞாயிறன்று தொற்றால்மதுரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
****************
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராமம் கஸ்தூரிபா மருத்துவமனைக்கு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 46 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரண பொருட்களை வழங்கினர்.
****************
டெல்டா பிளஸ் கண்டறியநவீன கருவிகள்
மதுரை:
தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் தொற்றை கண்டறிய பிரத்யேக ஆய்வககருவிகளை வாங்குவதற்கு மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
****************
நாட்டுப்புறக் கலைஞர்க்கு நிவாரணம்
மதுரை:
மதுரை அவனியாபுரத்தில் 105 நாட் டுப்புற கலைஞர்களுக்கு கொரோனாநிவாரணத்தொகை 2 ஆயிரம் ரூபாய்மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள் தொகுப்பை மாநில அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திபி.மூர்த்தி ஆகியோர் ஞாயிறன்று வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
****************
ரூ.20 லட்சம் மதிப்பில் உறிஞ்சு கிணறு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருபுவனம்பேரூராட்சிப் பகுதியில் உள்ள வைகையாற்றில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உறிஞ்சு கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனரெட்டிதெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
****************
நிவாரணம் வழங்கல்
இராஜபாளையம்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவில்லிபுத்தூர் கிளை, இடையப்பொட்டல் தெரு கிளை சார்பில்ஆதரவற்றோருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி வழங்கினார்.
****************
மீனவர் பலி
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமம் கீழதெருவைச் சேர்ந்தவர் விஜய். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆறுபேர் கொண்ட குழுவினர் ஞாயிறன்று மதியம் மடவாமேடு கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். பூம்புகார் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (21) என்பவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். சக மீனவர்கள் நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். தகவலறிந்த கடலோர காவல் நிலைய போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
****************
4 பேர் கைது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் (26) என்பவர், அவர்வீட்டின் முன்பு, அவருக்குச் சொந்தமான பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர மோட்டார் பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தை கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமம்வலித் (20), ரமேஷ் (32), தில்லைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (26), கடைக்கண் விநாயகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (23) ஆகியோர்திருடிச் சென்று கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே விற்பனை செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.