tamilnadu

img

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா பாதிப்பு...

மதுரை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், ஆட்சியர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி மருத்துவமனைக்கு கொரோனா அனுப்பி வருகிறது. 

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ-க்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும் அமைச்சருமான செல்லூர் ராஜு மற்றும் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் செல்லூர் ராஜு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.