மதுரை:
மதுரையில் 165 நாட்களுக்கு பின்னர்திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனுமதிக் கப்பட்டனர்.தமிழக அரசு அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து மதுரையில் உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில்,165 நாட்களுக்கு பின் செவ்வாயன்றுதிறக்கப்பட்டது. கோவில் திறக்கப் பட்டதையொட்டி தரிசனத்திற்காக வந்திருந்த கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் எட்டு மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கம்பத்தடி மாற்றமும் மற்றும்பிற சன்னதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவ்வாறு அணிந்திருப்பவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம்.இது இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் தொற்று பரவலைத் தடுக்க முடியும்.
சமூக இடைவெளி விடுவதில் அலட்சியம்
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செவ்வாயன்று பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் கோவில்நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்திருந்தது. ஆயினும் மாஸ்க்அணிந்துள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.