மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்புக்குச் சென்ற 4 வயது குழந்தை ஆருத்ரா, விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். 30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீரில் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால, சிகிச்சை பலனின்றி ஆருத்ரா உயிரிழந்தார்.
இவ்விவகாரத்தில் பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆசிரியர்கள் மற்றும் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.