tamilnadu

img

அங்கன்வாடி பணியாளர் நியமனத்தின் பின்னணியில் மதுரை ஆட்சியர் இடமாற்றம்

மதுரை:
மதுரை மாவட்டத்தில் 1,500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கு உத்தரவிட்டதாலே மதுரை ஆட்சியர் எஸ்.நாகராஜன் மின்னல் வேகத்தில் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி விவரமறிந்த அரசு ஊழியர்கள் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் 1,500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கான நேர்காணல் கொ.வீரராகவராவ் ஆட்சியராக இருக்கும்போது நடைபெற்றது. நேர்காணல் முடிந்து தேர்வா ளர்கள் பட்டியல் தயாராகியிருந்த நிலையில் கொ.வீரராகவராவ் மாற்றப்பட்டார். இவரைத்தொடர்ந்து ஆட்சியராக ச.நடராஜன் நியமிக்கப் பட்டார். அவர் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அக்கறை காட்டவில்லை. மக்களவைத் தேர்தல் சர்ச்சையில் சிக்கி அவர் மாற்றப்பட்டு எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டில் நாகராஜன் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதில் ஒன்று தான் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம். கிடப்பில் கிடந்த கோப்பை தூசி தட்டி எடுத்து, அரசு விதிப்படி தேர்வு செய்யப்பட்ட 1,500 பேருக்கும் பணி நியமன
உத்தரவு வழங்கியுள்ளார். இந்த உத்தரவு சம்மந்தப்பட்ட வர்களுக்கு திங்களன்று வழங்கப் பட்டுவிட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுங்கட்சி தரப்பு அவரை மின் னல் வேகத்தில் மாற்றிவிட்டது.

அத்தோடு நின்றால் பரவா யில்லை, ஆட்சியர் எஸ்.நாகராஜ னின் உத்தரவைப் பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் பலர் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு கை யெழுத்திடச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஆட்சியர் போட்ட உத்தரவு செல்லாது. வேறு உத்தரவு வழங்கப்படும் என வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர்.கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத குறையாக மாறிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் பணி நியமன உத்தரவை பெற்றுள்ள அங்கன்வாடி ஊழியர்கள்.

பொறுப்புக்கு... கூடுதல் பொறுப்பு
மதுரை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ரெ. குணாளன் கடந்த 30.4.2019-இல் ஓய்வு பெற்றார். அதையடுத்து சாந்தகுமார் பொறுப்பு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஆட்சியர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.