திருச்சி எஸ்.ஆர்.எம்.ஓட்டலை காலி செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. 1994 முதல் 30 வருட குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹோட்டல் இயங்கி வந்தது. 30 வருட குத்தகை காலம் 2022ஆம் ஆண்டு முடிந்தது. இந்த நிலையில், ஓட்டலை காலி செய்யும்படி தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் மேற்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.