விடுதலை மா.பவுன்ராசா காலமானார்
மதுரை, ஜூலை 6- விடுதலை ஏட்டின் மதுரை மாவட்டச் செய்தி யாளரும், திராவிடர்கழகத்தின் உசிலம்பட்டி பகுதி ஸ்தாபகர் தலைவர்களில் ஒருவருமான மா.பவுன்ராசா (59)மாரடைப்பால் சனிக்கிழமை இரவு உசிலம்பட்டியில் காலமானார். மா.பவுன்ராசா அரசியல் கட்சித் தலைவர்களிடம் நுணுக்கமான கேள்விகளை எழுப்பி பதிலை கேட்டுப்பெறுவதில் திறமையானவர். தலைவர்கள் பிழையான தக வல்களை தெரிவித்தால் குறுக்கிட்டு உரிய ஆதா ரங்களுடன் மெய்ப்பிப்பதில் வல்லவர். மதுரை மாவட்டத்திலேயே கருப்புச்சட்டை செய்தியாளர் என்ற பெருமையையும் பெற்றவர். அவரது மறைவிற்கு பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் மா. பவுன்ராசா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள் ளார். அவர் தமது இரங்கல் செய்தியில், “போர்க்களத்தில் ஒரு தளபதியை இழந்து நிற்கி றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
காவலர் பலி
விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே உள்ள சேத்தூர் ஊரக காவல் நிலைய எழுத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயி றன்று உயிரிழந்தார். இதையடுத்து விருது நகரில் தொற்றுக்கு பலியானோர் எண் ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
ஒருவர் பலி
இராமநாதபுரம், ஜூலை 5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திஜி ரோடு பகுதியைச்சேர்ந்த 35 வயது நபர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறு காலை உயிரிழந்தார். ஞாயிறன்று மாவட்டத்தில் 62 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,354 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மின்கசிவால் தீ விபத்து
விருதுநகர், ஜூலை 5- விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந் தவர் இந்திரதேவன் (55). கட்டட ஒப்பந்த காரராக வேலை செய்து வருகிறார். இவ ரது வீட்டில் உள்ள குளிரூட்டும் சாதனத் தில் மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவியது. இதையடுத்து, வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியேறினர். பின்பு, தீய ணைப்புத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வந்து தீ அருகில் உள்ள குடியிருப்பு களுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்து கட்டில், குளி ரூட்டும் இயந்திரம், மின் விசிறி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நிவாரணம் வழங்கல்
திருவில்லிபுத்தூர், ஜூலை 5- திருவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் வான் முகில் அமைப்பு ஃப்ரீடம் பண்ட் நிதியுதவியுடன் திருவில்லிபுத்தூர் வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்க ளில் உள்ள முப்பத்தைந்து கிராமங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மற்றும் ஆத ரவற்ற, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழக் கூடிய குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரணமாக 19 வகை உணவுப் பொருட்கள் 730 குடும்பங்களுக்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்ட்டது. இந்நிகழ்வில் வான்முகில் அமைப் பின் திட்ட மேலாளர் அருள் கள ஒருங்கி ணைப்பாளர்கள் சந்திரகலா, அனிதா, கற்பக சுந்தரி, முனியராஜ் வான்முகில் அமைப்பின் கிராம 35 வழிகாட்டினர்கள் கலந்துகொண்டனர்.
கடை திறக்க கட்டுப்பாடு
திருவில்லிபுத்தூர், ஜூலை 5- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வரக்கூடிய நிலையில் திரு வில்லிபுத்தூர் நகரில் ஜூலை 6-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை அனைத்துக் கடைகளும் மாலை மூன்று மணி வரை மட்டும் திறந்திருக்குமென அனைத்து வியாபார சங்கத் தலைவர் குருசாமி தெரிவித்துள்ளார். உணவகங் கள், மருந்து கடைகள், பால் நிலையங் கள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்கல்
சின்னாளபட்டி, ஜூலை 5- வத்தலக்குண்டு ஒன்றியம் எம் வாடிப்பட்டி யில் உள்ள எக்கோ ட்ரஸ்ட் சமூக சேவை நிறு வனத்தின் மூலம் கொரோனா நிவாரண உதவி தூய்மைப் பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர் களுக்கு வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ சேகர் முன்னிலையில் எக்கோ டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி எம்.முத்துசாமி வழங்கினார்.