வல்லமையோடு வாழ்க! - வல்லமையோடு வாழ்க!
நல்ல செயலை நாடு! நாடின் துன்பம் இல்லை அல்ல செயலால் வருமே - தம்பி அளவில் லாத தொல்லை. எதையும் எண்ணிச் செய்க! எண்ணிச் செய்தால் வெற்றி. சிதையும் செயலை விடுக! -உன்னைத் தேடும் புகழும் சுற்றி ! ஒற்றுமை யோடு வாழ்க ! உலகில் அதுவே வலிமை. சொற்களை அளந்து பேசு!- அது சூட்டும் உனக்குப் பெருமை. நல்ல நண்பரைத் தேடு! நட்பே காக்கும் படையாம்! உள்ளம் உறுதி வேண்டும் - அது உனக்கு நால்வகைப் படையாம். அன்பே வெல்லும் கருவி! அதுவே அமுதம் நம்பு! இன்பம் சுரக்கும் அன்பே - உலகில் என்றும் மேலாம் தம்பி. நல்லவை நாடிச் செல்க நாடும் உன்னைப் போற்றும். வல்லமை யோடு வாழ்க - உலகம் வாழ்த்தும் உச்சி ஏற்றும்!
