கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!
அமெரிக்க அச்சுறுத்தல்களை முறியடிப்பேன் என மார்க் கார்னி பேச்சு
ஒட்டவா, ஏப். 29 - கனடா நாட்டின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். வாக்கெடுப்புகள் முடிவடைந்த நிலையில், 343 உறுப்பினர் களைக் கொண்ட அந்நாட்டு நாடாளு மன்றத்தில் பழமைவாதிகளான கன்சர்வேட்டிவ் கட்சியை விட லிபரல் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை என்ற நிலை யில், லிபரல் கட்சி 156 இடங்களை யும், கன்சர்வேடிவ் 145 இடங்களை யும் பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் முடி வில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு தலைநகர் ஒட்டாவாவில் தனது ஆதர வாளர்கள் முன்னிலையில் பேசிய லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மார்க் கார்னி, “அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை, நமது நாடு எதிர்கொள்ளும் நிலையில், மக்க ளாகிய நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “இரண்டாம் உலகப் போரு க்குப் கனடாவும் அமெரிக்கா வும் பரஸ்பர உறவுடன் விளங்கி வந்த சிலையில், அமெரிக்காவின் தற்போ தைய துரோகம் அதிர்ச்சிகரமானது. அதை நாம் இப்போது கடந்து சென்று விட்டாலும், படிப்பினைகளை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. டிரம்ப், நம்மை பிரித்து நமது நாட்டை ஆக்கிரமிக்க திட்டமிடுகிறார்” எனவும் குற்றம் சாட்டினார்.