சென்னை, ஜன. 20 - ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாகவும் யுஜிசி வெளியிட்ட விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, தமிழகத்தில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதி முக, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து பிரதான அரசியல் கட்சி களும் தங்களின் கண்டனத்தை தெரி வித்திருந்தன. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், யுஜிசி இந்த விதிமுறை களை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அர சின் சார்பில் ஜனவரி 9 அன்று சிறப்புத் தீர்மானத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றினார். இந்நிலையில், இப்பிரச்சனையில் அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று தமிழக முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக 9 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அவர் கடிதத்தையும் எழுதியுள்ளார். “பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வின் (UGC), வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக உள்ளது. இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப் படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்து வத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசின் இந்த முயற்சி களுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம்” என்று கடிதத்தில் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “மாநில உரிமைகளுக்கு எதிராக, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு சட்டப் பேர வையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதைப் போன்று தில்லி, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்றங் களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் மாநில முதல்வர்களை, மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம்
யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் முதல்வர் மு.க. ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9.1.2025 அன்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் தமக்கு ஆழ்ந்த கவ லையை ஏற்படுத்துவதாகவும், வெளிப்படுத்து, வரைவு நெறிமுறை களில் உள்ள பல விதிகள் மாநிலங் களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரைவு யுஜிசி (இளங் கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தர நிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர் பான கவலைக்குரிய சில முக்கிய விதி களையும், ஒவ்வொன்றாக குறிப்பிட்டு, அதன் பாதிப்புகளையும், தமது ஆட்சேபணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கியுள்ளார்.