மதவாத சக்திகளை முறியடித்து சோசலிச அரசை நிறுவுவோம்! நவம்பர் புரட்சி தினக் கூட்டத்தில் உ.வாசுகி உரை
சென்னை, நவ.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம், அம்பத்தூர் பகுதிக் குழு சார்பில் நவம்பர் புரட்சி தின சிறப்பு பேரவைக் கூட்டம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசுகையில், முதலாளித்துவ சக்திகளி டமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து, தொழிலாளி வர்க்கத்தின் கையில் அளித்த மகத்தான புரட்சி நவம்பர் புரட்சி என்று அவர் குறிப்பிட்டார். தொழி லாளர்கள் ஒரு அரசுக்கு தலைமை தாங்க முடியும் என்பதை நிரூபித்த ரஷ்ய புரட்சி, உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சி உருவான பிறகு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்க ளுக்கு வேலை வாய்ப்புகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் உரிமையின் அடிப்படையில் கிடைத்தன. தேசிய இனங்களுக்கு சம உரிமை சோவியத் யூனியனில் பல தேசிய இனங்கள், பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருந்தனர். அப்படி பல்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், மொழி கள் பேசக்கூடிய மக்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஒரு சமமான நிலையில் வைத்திருந்தது. ஒரு தேசிய இனத்திற்கு அதிகாரம், இன்னொரு தேசிய இனத்திற்கு அதிகாரம் இல்லை. ஒரு மொழிக்கு அதிகாரம், இன்னொரு மொழிக்கு அதிகாரம் இல்லை. ஒரு மதத்திற்கு அதிகாரம், இன்னொரு மதத்திற்கு அதிகாரம் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் சோஷலிச அரசு சாதனை படைத்தது. ஆனால் இன்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேசிய இனப் பிரச்சனை, மொழி பிரச்சனை, மதப் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனை கள் நீடிக்கிறது. இது களையப்பட வேண்டும் என்றால் சோசலிச அரசு அமைய வேண்டும். தேசிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சி அன்றைய காலகட்டத்தில் இந்தியா உட்பட பல நாடுகளின் தேசிய விடுத லைப் போராட்டங்களுக்கு சோவியத் புரட்சி மிகப்பெரிய பலமாக அமைந்தது. மேலும், சோவியத் யூனியனிடம் இருந்து தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல உதவி களைப் பெற்றுதான் இந்தியா கூட முன்னேற்றமடைந்தது. ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் உலகம் முழுக்க வர சோவியத் அரசே காரணமாக இருந்தது. நாம் அனைவரும் நவம்பர் புரட்சி யின் படிப்பினைகள் மற்றும் கோட்பாடு களை மனதில் ஏந்தி, நவ பாசி சத்தையும், மதவாத சக்திகளையும் முறி யடிப்போம், சாதிய கட்டமைப்புகளை தகர்த்தெறிவோம், சோசலிச அரசை நிறுவுவோம் என இந்நாளில் சபத மேற்போம் என்று உ.வாசுகி வலி யுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், ஆவடி பகுதிச் செயலாளர் எம்.ராபர்ட் ராஜ், டி.கே.சம்பத்ராவ், எஸ்.தசரதன், எஸ்.எஸ்.கணேஷ்ராவ் (மின் அரங்கம்) ஆகியோரும் உரையாற்றினர். முன்ன தாக எஸ்.வேம்புலி வரவேற்க, பி.மகா லட்சுமி நன்றி கூறினார்.
