தொழிலாளர் உரிமைகள், தேச நலன் காக்கப் போராடுவோம்!
பிஎஸ்என்எல் அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு
கோயம்புத்தூர், ஜூலை 23 - கோவையில் நடைபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அகில இந்திய மாநாட்டைத் தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தபால் தந்தி ஊழியர்களை ஒருங்கி ணைத்த மாபெரும் தலைவர்களின் பாரம்பரியத்தைக் கொண்டது. வி.ஏ.என். நம்பூதிரி போன்ற தற்போதைய தலை வர்கள் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற னர். 1964, 1968, 1974 ஆம் ஆண்டு களில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் முதல், 1980 மற்றும் 1991 க்குப் பிந்தைய அனைத்து ஒன்றுபட்ட தொழிற்சங்கப் போராட்டங்களிலும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் பங்கேற் றுள்ளது. இந்த போராட்டப் பாரம்பரி யத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, என்று அழைப்பு விடுத்தார். தொழிலாளர் நலன்களும் தேச நலன்களும் “பி.எஸ்.என்.எல் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்ப தற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர்க ளின் உரிமைக்காக மட்டு மல்லாமல், நாட்டின் நலன்கள் மற்றும் ஒட்டு மொத்த மக்களின் நலன்களுக்காகவும் போராடுகிறது. தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், கியூபா மக்களுக்கு நிதி திரட்டும் முடிவும் தொழிற்சங்க இயக்கத் தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான உலகளாவிய தொழிலாளர் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. என்று குறிப்பிட்ட ஏ.கே.பத்மநாபன், உக்ரைன் - ரஷ்யப் போர் ஏகாதிபத்தியத்திற்கும் நேட்டோ கூட்டமைப்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடை யிலான போராட்டம். காசாவில் நடக்கும் இனப்படுகொலை ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறியின் விளைவு என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், “மோடி அரசாங்கம் தொழிலாளர்களின் சட்டரீதி யான உரிமைகள், வேலை நேரம், தொழிற் சங்க உரிமை மற்றும் ஜனநாயக உரி மைகளைப் பறிக்கிறது. இது ஒட்டுமொத்த சட்டத்தை அழிக்கும் முயற்சி. இதை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக் கப்பட்டு, பல்வேறு வழிகளில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. புதிய சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் போ ராட்டங்களை பயங்கரவாதச் செயல்களா கச் சித்தரிக்கப்படுகின்றன; மகாராஷ்டிரா வில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் எந்த எதிர்ப்பையும் அனுமதிக்காது என்ப தற்கான அரசாங்கத்தின் நிலையை காட்டு கிறது” என, ஏ.கே.பத்மநாபன் விவரித்தார். ஒற்றுமையின் அவசியம் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போ ராடத் தொழிலாளர்கள் தங்கள் ஒற்று மையை உருவாக்க வேண்டும். தொழி லாளர்களின் ஒற்றுமையைக் குலைக்க வலதுசாரி சக்திகள் முயற்சிக்கின்றன. அந்த முயற்சியை முறியடிக்கத் தொழிலா ளர்கள் ஒன்றுபட வேண்டியது அவசியம். அந்த திசைவழியை உங்கள் மாநாடு தீர்மானிக்கட்டும் என்றும் கூறினார்.