பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் பறவைகளும் கோடை வெயிலால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், பறவைகளுக்கு உணவு அளிக்கும் படத்தை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளனர். “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் சிறப்பு தொழுகை!
சென்னை: தமிழகத்தின் அனைத்து முக்கிய மசூதி களிலும் திங்களன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டா டப்பட்டது. காலை முதலே முஸ்லிம்கள் மசூதிகளுக்கு திரளாகச் சென்றனர். தொழுகையின் போது, சமுதாய ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லொழுக்கம் குறித்து இமாம் கள் உரை நிகழ்த்தினர். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களில் உள்ள மசூதி களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
தெற்கு ரயில்வே பதில்
சென்னை: பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு ஏதும் நிகழ வில்லை என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே பதில ளித்துள்ளது. யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 9 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறிய சென்சார் கேபிள்கள் உள்ளன என்றும் கூறியுள்ளது. தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே! நீலகிரி:
நீலகிரியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் திங்களன்று (ஏப்.1) நள்ளிரவு முதல் ஜூன் இறுதிவரை அமல்படுத்தப் படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 மாதத்தில்...
விருதுநகர்: “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
உளவுத் துறையை வலுப்படுத்துக!
திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இதில், “தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் குற்றச் சம்பவங்களை முழுமையாகத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு
சென்னை: தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு ‘சாட்ஜிபிடி’யை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் வகையிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் ஏப்.3 (வியாழக்கிழமை) அன்று வழங்கப்படுகிறது.