tamilnadu

img

மத வெறியை மாய்ப்போம்! - மக்கள் ஒற்றுமையைக் காப்போம்! மதுரையில் மாபெரும் மனிதச்சங்கிலி!

மத வெறியை மாய்ப்போம்! -   மக்கள் ஒற்றுமையைக் காப்போம்! மதுரையில் மாபெரும் மனிதச்சங்கிலி!

மதுரை, ஜன. 31- தேசத்தந்தை மகாத்மா காந்தி யின் நினைவு நாளை முன்னிட்டு, “மத வெறியை மாய்ப்போம் – மக்கள் ஒற்றுமையைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் மதுரையில் எழுச்சிமிக்க மனிதச்சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தலைமை தாங்கினார். தமுக்கம் தமிழன்னை சிலையி லிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை நீண்ட இந்த மனிதச்சங்கி லியில், பல்வேறு தொழிற்சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள், மத நல்லிணக்க இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்ற னர். ஒருங்கிணைப்பாளர் ஜெ.  விஜயா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காந்தி படுகொலை: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் நிகழ்ச்சியில் பேசிய சமயப் பெரி யோர்கள்,”இந்தியாவின் மனச்சாட்சி யை உலுக்கிய காந்தி படுகொலை என்பது ஒரு தனிநபரின் மரணம் மட்டுமல்ல; அது மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” என்று வேதனை தெரிவித்தனர். மேலும், கிராமப்புற ஏழைகளுக்கான வேலை உறுதித் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அர சியல் சாசனத்தையும் மத நல்லி ணக்கத்தையும் பாதுகாக்க வேண்டி யது தற்போதைய காலத்தின் கட்டா யம் என்று அவர்கள் வலியுறுத்தினர். மக்கள் ஒற்றுமையின் அடையாளம் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் தனது நிறை வுரையில்,”சுதந்திரப் போராட் டத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்றியவர் காந்தி. அவர் உயிரோடு  இருந்தவரை நாட்டில் மதக்கல வரத்தை நடத்த முடியாது என்பதால் தான் கோட்சே அவரைப் படுகொலை செய்தான். காந்தி அருங்காட்சிய கத்தில் உள்ள அவரது இரத்தக் கறை  படிந்த ஆடை, மக்கள் ஒற்று மைக்கான சாட்சியாக இன்றும் இருக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர்,” அயோத்தியில் தொடங்கிய மத அர சியல் இன்று மதுரை, திருப்பரங் குன்றம் வரை கொண்டு வரப்படுவது ஆபத்தானது. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற முயலும் சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண் டும். காந்தி இன்றும் நமக்குத் தேவைப்படுவது கடந்த காலத்திற் காக அல்ல, எதிர்காலத் தலைமுறை யின் அமைதியான வாழ்விற்காகவே” என்று எச்சரித்தார். பங்கேற்பாளர்கள் இவ்வியக்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் வழக்க றிஞர் சி. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா, பேராயர் அருட் பெருந்திரு அறிவர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், அருட்பணி எஸ்.எம். பால்பிரிட்டோ, மதுரை டவுன் அரசு ஹாஜியார் அல் ஹாஜ் சபூர் முகைதீன், அல் ஹாஜ் எஸ்.ஏ. லியாகத் அலி, தவத்திரு மாயாண்டி பிச்சை சுவாமிகள் ஆகியோர் உரையாற்றினர். முனைவர் சு. கிருஷ்ணன், சி.  செல்வின் சத்யராஜ், ஜி. மீனாட்சி சுந்தரம், எஸ்.எஸ். சீனிவாசன், அ. பால்முருகன், கு. குரோனி செந்தில், எம். புஷ்பராஜன், வி. சந்திரசேகரன், ஏ. ஜோசப் ஜெயசீலன், ஜே. டீலன் ஜெஸ்டின், என். எஸ். அழகர்பாபு, ஏ. பாண்டிவேல், ஏ. போனிபேஸ், பி. விமலா, என். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாந கர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஏ. பாவேல் சிந்தன் நன்றியுரை ஆற்றினார்.