tamilnadu

img

லெனின் கட்டுரைகள்... மார்க்சிய ஒளி விளக்குகள் - ஜி.ராமகிருஷ்ணன்

லெனின் கட்டுரைகள்... மார்க்சிய ஒளி விளக்குகள் - ஜி.ராமகிருஷ்ணன்

மாமேதை லெனினுடைய உரைகள், கட்டுரைகள், அவர் எழுதிய நூல்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்து மாஸ்கோ பதிப்பகம் 54 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி யும் சுமார் 650 பக்கங்களைக் கொண்டது. இத்த னை தொகுதி களை தமிழில் வெளியிடுவது இப்போது சாத் தியமில்லை. சோவியத் ஒன்றி யத்தில் முதலில் தமிழில் வெளி யிடப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளில், லெனின் எழுதிய மிக முக்கியமான, உலகளவில் புகழ்பெற்ற எழுத்துகளை மட்டும் தேர்வு செய்திருந்தனர். அந்தத் தமிழ்ப்பதிப்புகள் வெளியாகி நீண்ட காலமாகிவிட்ட நிலையில், அவற்றை இன்றைய வாசகர்களின், இயக்கத்தோழர்களின் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த பாரதி புத்தகாலயம் முன்வந்துள்ளது. பாரதி புத்தகாலயம் லெனினுடைய தேர்வு நூல்கள் 12 தொகுதிகளையும் பரி சீலனை செய்து, அவசியமான திருத்தங் களுடன் அச்சிட்டுள்ளது. பாட்டாளி வர்க்க  தினமான மே 1 அன்று இத்தொகுதி கள் விற்பனைக்கு வருகின்றன. இக்கட்டு ரையின் நோக்கம் இத்தொகுதிகளில் உள்ள முக்கிய படைப்புகளை அறிமுகப் படுத்துவதாகும்.

லெனினின் வரலாற்றுத் தாக்கம்

54 ஆண்டுகளே வாழ்ந்த தோழர் லெனின் (1870-1924) குறுகிய காலத்தில் உலகளவில் அழிக்கமுடியாத தாக்கத்தை  ஏற்படுத்தினார். கட்சித் திட்டத்தை உரு வாக்கி, கட்சியை கட்டமைத்து, அதிகா ரத்தைக் கைப்பற்றி சோவியத் ஒன்றி யத்தில் சோசலிச நிர்மாணத்திற்கான பாதையை வகுத்தார். அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீட், ரஷ்யப் புரட்சியின் போது லெனி னை நேரில் கண்டவர்; “ஆழ்ந்த கருத்து களை எளிய முறையில் விளக்கும் ஆற்ற லும் நிலைமையைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் மதிநுட்பமும் அசாதாரணமான தொலை நோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன” என்று லெனினைப் பற்றிக் குறிப்பிட்டார். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவர், “லெனின் வாழ்க்கையின் முக்கியமான பணி, அக்டோபர் புரட்சியைவெற்றிகரமாக நிறைவேற்றவும், சோச லிசத்தின் கட்டமைப்பை வழிநடத்திடவும் திறன் கொண்ட ஒரு கட்சியை உருவாக்கியதே ஆகும்!” என்றார். ஹங்கேரிய மார்க்சியவாதி கியோர்கி லூகாஸ் லெனினை “பாட்டாளி வர்க்கத்தின்  விடுதலையினால் உருவாக்கப்பட்ட தத்துவ  இயலாளர்களில் மார்க்ஸ்க்கு இணையான வர்” என்று போற்றினார். மார்க்ஸ் சொன்னது போல், “தத்துவ அறிஞர்கள் உலகைப் பற்றி விரிவுரைகள் செய்திருக்கிறார்கள், ஆனால் நம் முன் உள்ள பிரச்சனை அதை மாற்றுவதே.” உலகை மாற்ற மார்க்ஸ் வழிகாட்ட, லெனின் செயல்படுத்தினார்.

லெனினின் முக்கிய சித்தாந்தங்கள்

புரட்சியை நடைமுறைப்படுத்த லெனின் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தார்:

1.    தத்துவம் – மார்க்சியத்தை ரஷ்ய சூழலுக்கு ஏற்ப பொருத்துதல்

2.    நடைமுறை - தத்துவத்தை செயல்படுத்து வதற்கான உத்திகளை உருவாக்குதல்

3.    அமைப்பு - தத்துவத்தையும் நடைமுறை யையும் இணைக்கும் கட்சி அமைப்பை உறுதியாக கட்டமைத்தல்

மார்க்சிய அடிப்படைகள்

லெனின் கட்டுரைகளின் முதல் தொகுதி யில் காரல்மார்க்ஸ் வாழ்க்கை பற்றிய கட்டுரையும், ‘மார்க்சியத்தின் மூன்று தோற்று வாய்களும், மூன்று உள்ளடக்கக்கூறுகளும்’ என்ற நூலும் உள்ளன. மார்க்சியத் தத்துவம் ஏங்கல்சினுடைய படைப்புகளையும் உள்ளடக்கியது.  மார்க்சியத்தின் தத்துவம், பொருளாதாரம், சோஷலிசம் ஆகிய மூன்று கூறுகளின் தோற்றம் மற்றும் உள்ளடக்கத்தை இந்நூல் விளக்குகிறது.

லெனினின் படைப்புகளை புரிந்துகொள்ளல்

லெனினுடைய எந்தப் படைப்பையும் படிக்கும்போது, அது எழுதப்பட்ட அரசியல்-பொருளாதார சூழலை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அவரது படைப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, தொகுதி 7-இல் உள்ள ‘ரஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழி லாளர் கட்சி (போல்ஷ்விக்)யின் மத்தியக் கமிட்டியிலிருந்து எல்லாக்கட்சி உறுப்பினர் களுக்கும் ரஷ்யாவின் அனைத்து உழைக்கும் வர்க்கங்களுக்கும்’ என்ற கடிதம், 1917 நவம்பரில் எழுதப்பட்டது. காமனேவ், ஷினோ வேவ் ஆகியோர் லெனினின் தலைமையை எதிர்த்து ராஜினாமா செய்தபின் எழுதப் பட்டது. அவர்கள் அக்டோபர் 10 மத்தியக் குழுக் கூட்டத்தில் லெனின் முன்மொழிந்த ஆயுதப் புரட்சித் தீர்மானத்தை எதிர்த்திருந்தனர். மேலும், டிராட்ஸ்கி, சில காரணங்களைச் சொல்லி, புரட்சியை சில காலம் ஒத்தி வைக்க லாம் என்றார். இந்தப் பின்னணியை அறிந்தால் தான் அக்கடிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

புரட்சிக்கான கருவி - “என்ன செய்ய வேண்டும்?”

முதல் தொகுதியில் உள்ள “என்ன செய்ய வேண்டும்?” (1902) லெனினின் மிக  முக்கியமான படைப்பாகும். ரஷ்யக் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பின்,  உருக்குப்போன்ற தொழிலாளி வர்க்க கட்சியை  கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. லெனின் இந்நூலில் வலியுறுத்தியது: “புரட்சிகரமான தத்துவமின்றி புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது” என்றும், “அனைத்துவிதமான கொடுங்கோன்மை, ஒடுக்குமுறை, வன்முறைக்கு எதிராக ஜன நாயகக் கண்ணோட்டத்தில் எதிர்வினை யாற்றத் தொழிலாளர் வர்க்கத்தைத் தயார்ப் படுத்தாதவரை பாட்டாளி வர்க்க உணர்வு உண்மையான அரசியல் உணர்வாக இருக்காது” என்றும் குறிப்பிட்டார்.

கட்சியின் உள் போராட்டங்கள்

தொகுதி 2-இல் ‘ஓரடி முன்னால் ஈரடி  பின்னால்’ (நமது கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி) என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடியைப் பற்றியது. மென்ஷ்விக்குகள் மாநாட்டின் முடிவுகளைச் சிதைக்க முயன்றதை இது விவரிக்கிறது.

ஏகாதிபத்தியமும் புரட்சியும்

தொகுதி 5-இல் ‘ஏகாதிபத்தியம் முத லாளித்துவத்தின் உச்சகட்டம்’ (1916) என்ற நூல் உள்ளது. இதில் லெனின், ஒரு நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி சாத்தியம் என்ற உத்தியை முன்வைத்தார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம்  நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதலாளித்து வம் ஏகாதிபத்தியமாக மாறியதையும், நாடுகளிடையே சந்தைப் போட்டி முதல் உலகப்போருக்கு வழிவகுத்ததையும் ஆய்வு செய்தார். ஏகாதிபத்திய நாடுகளிடையே போர் நடக்கும்போது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் என்றும், முதலாளித்துவச் சங்கிலியில் பல வீனமான கண்ணியான ரஷ்யாவில் புரட்சி சாத்தியம் என்றும் அறுதியிட்டுக் கூறினார். அரசின் வர்க்கத் தன்மை தொகுதி 6-இல் ‘அரசும் புரட்சியும்’ என்ற முக்கியமான நூல் உள்ளது. 1917 புரட்சி யின் தருவாயில், மென்ஷ்விக்குகளும் சோஷ லிசப் புரட்சிக் கட்சியினரும் அரசு எல்லா  வர்க்கத்தினருக்குமானது என்ற சீர்திருத்த வாதக் கண்ணோட்டத்தைப் பரப்பினர். லெனின் இந்நூலில், அரசு என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கருவி என்றும், அது எதிர் வர்க்கங்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் வலியுறுத்தினார். மார்க்ஸ் கூறியது போல், அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாளும் கருவி என்றும் சுட்டிக்காட்டினார். முதலாளித்துவ அரசை வீழ்த்தி, தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். புரட்சித் தந்திரங்கள் 1917 பிப்ரவரியில் ஜார் மன்னர் ஆட்சி வீழ்ந்து இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில், தொகுதி 5-இல் உள்ள ‘போர்த்தந்திரங்களைப் பற்றிய கடிதங்கள்’ நூலில் லெனின் புதிய புரட்சி உத்திகளை முன்வைத்தார். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முடிந்த தால், இப்போது தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோஷலிசப் புரட்சிக்கான போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்டுதல் தொகுதி 10-இல் ‘இடதுசாரிக் கம்யூனிசம் – ஓர் இளம் பருவக்கோளாறு’ (1920) நூல்  இடம்பெற்றுள்ளது. உலகளாவிய கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு இன்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும் இந்நூல், கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கு முன் எழுதப்பட்டது. லெனின் இந்நூலை எழுதும்போது, அச்சுக்கோப்பது முதல் பிரசுரமாக அச்சிடு வது வரை எல்லா வேலைகளையும் நேரடி யாகக் கண்காணித்தார். இதன் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸின் முடிவுகளுக்கு அடித்தளமாக அமைந்தன. லெனினின் பண்புநலன்கள் லெனின் தனது படைப்புகளில் இலக்கி யம், நாட்டுப்புறக் கதைகள், செவ்விலக்கி யங்களிலிருந்து பொருத்தமான எடுத்துக் காட்டுகளைத் திறம்பட பயன்படுத்தினார். “கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்”, “நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பூனைகள்” போன்ற சுவையான மேற்கோள் களை தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் பயன்படுத்தினார். இவை அவரது வாசிப்பின் ஆழத்தையும், மேதைமையையும் வெளிப்படுத்துகின்றன. தோழர்களே, வாங்கிப் படிப்பீர்! லெனினின் படைப்புகள் புரட்சிக்கான வழிகாட்டிகளாக மட்டுமல்லாமல், மார்க்சியத்தை ஒரு குறிப்பிட்ட தேசத்தின் சூழ லுக்கு ஏற்ப செயல்படுத்துவதற்கான முன்மாதிரியாகவும் திகழ்கின்றன. பாரதி புத்தகாலயம் வெளியிடும் 12 தொகுதிகளும், இன்றைய தோழர்களுக்கு வழிகாட்டும் கைவிளக்குகளாக அமைந்துள்ளன. தோழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும்.