சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் பேரணி
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்.14 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருப்பூரில் ஞாயிறன்று மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி யில் ஈடுபட்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட் டுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத் தலை ஏற்று, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சட்டமேதை அம்பேத்க ரின் பிறந்தநாளை முன்னிட்டு ஞாயி றன்று பேரணியில் ஈடுபட்டனர். சிக் கண்ணா கல்லூரியிலிருந்து சௌடாம் பிகா திருமண மண்டபம் வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமை வகித்தார். மாவட்ட சட்ட உதவி வழக்கறிஞர் கௌசல்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், அனைவரும் அரசியல மைப்பு சட்டத்தை பின்பற்றி அனைவ ருக்கும் சமமான உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தீண்டா மையை ஒழிக்க வேண்டும், என்றார். பிறகு மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன் குமார், ரேவதி, லட்சுமிகாந்த் ஆகி யோர் தலைமையில் மாணவ, மாணவி கள் ‘சமூகநீதியை காக்க வேண்டும்’ போன்ற முழக்கங்களை எழுப்பியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பேரணியில் சென்றனர். இதன்பின் சாதிய வேறுபாடுகளை ஒழிப்போம், சமத்துவம் காப்போம் போன்ற உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டனர்.