tamilnadu

பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு சலவைத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார்

பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு சலவைத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார்

திருச்சி வண்ணாரப்பேட்டையில்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7-  தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநிலத் தலைவர் பாலன், பொதுச்செயலாளர் வெங்கடேசன் மற்றும் சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம், திங்களன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.  அதில், “திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை பகுதியில் 88 ஆயிரத்து 762 சதுரஅடி நிலம் எங்கள் சங்கத்துக்கு சொந்தமானது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.17 கோடியாகவும், இதனை ஒரு தனிநபர் முறைகேடாக ஆக்கிரமித்தும் கட்டுமானங்களை எழுப்பியுள்ளார். மேலும், அந்த தனிநபர் வீட்டுமனையாக அதை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தாங்கள் அதனை தடுத்து நிறுத்தி சங்கத்துக்குரிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.