ஈரோட்டில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு
ஈரோடு, மார்ச் 4- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத் துறை அமைச் சரால் உழைப்பாளர் நலக்கூடம் அமைக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்டு மானத் தொழிலாளர்கள் அன்றாடப் பணிக் காக காலையில் கூடி காத்திருக்கும் இடங்க ளில், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய் யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப் படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங் கள், 20 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன டிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் நிறுவப் பட்ட அடிப்படை வசதி மையத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத் தார். அதனை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி புதனன்று கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உழைப் பாளர் நலக்கூடத்தில், மின் விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள், குடிநீர் வசதி, இருக்கை வசதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து, நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக் கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப் பட்டுள்ள குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்ச லம், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத்திட்டம்) கோ.ஜெயலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
