விசாகப்பட்டினத்தில் இன்று முதல் ‘தொழிலாளர் திருவிழா’ தொடக்கம்
நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு! விசாகப்பட்டினம், டிச. 26 - சிஐடியு 18-வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 27) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ‘ஷ்ராமிக உற்சவ்’ எனப்படும் பிரம்மாண்ட தொழிலாளர் திரு விழா நடைபெறுகிறது. ஆந்திரா பல்கலைக்கழக மாநாட்டு அரங்கிற்குப் பின்னால் உள்ள மைதானத்தில் நடை பெறும் இந்த விழாவினை, விசாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியர் எம்.என். ஹரேந்திர பிரசாத் (IAS) இன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் சிறப்பு விருந் தினராகப் பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சி.எச். நர சிங்க ராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “அகில இந்தியத் தொழி லாளர் வர்க்கத்தின் எழுச்சி யையும், ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம் மற்றும் அறி வியல் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்” எனத் தெரிவித்தனர். சிறப்பம்சங்கள் • அறிவியல் மற்றும் புத்தகக் கண்காட்சி: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், புகைப்படக் கண்காட்சி, 12 வகையான அறிவியல் அரங்கு கள், மற்றும் மனித உடற்கூறியல் (Anatomy) கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. • கலை நிகழ்ச்சிகள்: கேரளாவின் கதகளி, மோகினியாட்டம், குஜராத்தின் கர்பா நடனம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களின் பாரம்பரியக் கலைகள் பொதுமக்களுக்காக மேடை யேற்றப்பட உள்ளன. • சமூகக் கருப்பொருள்கள்: ஏழு நாட்களும் மதச்சார்பின்மை, சமூக நீதி, பாலின சமத்துவம், தொழிலாளர்-விவசாயி ஒற்று மை, மற்றும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ போன்ற முக்கிய மான சமூகக் கருப்பொருள் களின் அடிப்படையில் விவா தங்களும் கலைகளும் அரங் கேறும். திரைத்துறைப் பிரபலங்களின் வருகை விழாவின் வெவ்வேறு நாட்களில் கீழ்க்கண்ட ஆளுமை கள் பங்கேற்க உள்ளனர்: டிசம்பர் 28-31: பாடகர் கோரெட்டி வெங்கண்ணா, பாட லாசிரியர் அசோக் தேஜா, திரைக் கலைஞர் ரோகிணி, இயக்குனர் பாப்ஜி. ஜனவரி 1-2: இயக்குனர் சத்ய ரெட்டி, தமிழ் திரைப்பட இயக்கு னர் ராஜு முருகன், மற்றும் இயக்குனர் அட்டாடா ஸ்ருஜன். போராட்டக் குரலும் விழிப்புணர்வும் விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் தனியார்மயமாக்கப் படுவதற்கு எதிரான எதிர்ப்புப் பாடல்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் இவ்விழாவில் முக்கிய இடம்பிடிக்கின்றன. கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி இந்த ஒரு வார காலத் திருவிழா பொதுமக்க ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள், மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆக்கப்பூர்வமான திரு விழாவில் திரளாகப் பங்கேற்க விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
